நம் நாட்டில் ஆட்டோமொபைல் இன்டஸ்ட்ரியில் 3 மாசத்தில் 2 லட்சம் பேர் வேலை போச்சு!

ஆட்டோமொபைல் சந்தையில் உலக அளவில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது என்றால் அதற்கு காரணம் தமிழகம் தான். ஆட்டோமொபைல் தயாரிப்பில் தமிழகத்தின் பங்கு மட்டும் 35 சதவீதமாக உள்ளது. குறிப்பாக சென்னை ஆசிய அளவில் ஆட்டோமொபைல் தொழிலின் தலைமையகமாக திகழும் சூழ்நிலையில் இந்த ஆட்டோமொபைல் துறையில், கடந்த 3 மாதங்களில் 2 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக மோட்டார் வாகன முகவர்கள் கூட்டமைப்பான எப்ஏடிஏ(Federation of Automobile Dealers Associations) கூறியுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் ஆஷிஷ் ஹர்சராஜ் , “ ஆட்டோமொபைல் துறை மீள்வதற்கான எந்த வாய்ப்பும் உள்ளதாக தெரியவில்லை. இதனால், வருங்காலங்களில் வேலை இழப்புகள் தொடர வாய்ப்பு உள்ளது. பெரும்பாலான வேலை இழப்புகள் கடந்த 3 மாதங்களாக தான் நடந்துள்ளன. மே மாதத்தில் துவங்கிய வேலை இழப்புகள், ஜூன், ஜூலை யிலும் தொடர்ந்தது. தற்போது, வாகன விற்பனை துறையில் தான் வேலை இழப்புகள் நடந்து உள்ளன. மந்தநிலை தொடர்ந்தால், தொழில்நுட்ப பிரிவில் இருப்போரும், வேலையிழப்பை சந்திக்க நேரிடும். தற்போது வரை, இந்தியா முழுவதும் 2 லட்சம் பேர் வேலை இழப்புகளை சந்தித்துள்ளனர்.

கடந்த 2 மாதங்களில் எங்களின் கணிப்பின்படி வாகன முகவர்கள் 7 முதல் 8 சதவீதம் பேர் வேலை இழந்துள்ளனர்.நாடு முழுவதும் 15 ஆயிரம் பேர் நடத்தும் 26 ஆயிரம் ஆட்டோமொபைல் ஷோ ரூம்கள் மூலம் 25 லட்சம் பேர் வேலைவாய்ப்புகளை பெற்றனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிந்த 18 மாதங்களில் நாடு முழுவதும் 271 நகரங்களில் 286 ஷோரூம்கள் மூடப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 3 மாதங்களில் மட்டும் 286 ஷோரூம்கள் மூடப்பட்டுள்ளன.

32 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். விற்பனையில் ஏற்பட்ட மந்தம் தான் வேலையிழப்புக்கு முக்கிய காரணம்.கடந்த 3 அல்லது 4 மாதங்களில், வருமானம் குறைந்த நிலையில், உற்பத்தி மற்றும் பராமரிப்பு செலவு அதிகரித்து வருகிறது. இதனால், வேறு வழியின்றி ஆட்களை குறைத்து வருகிறார்கள்.கடந்த மார்ச் வரை, விற்பனையில் மந்தம் தற்காலிகமானது. மீண்டும் புத்துயிர் பெறும் என கருதி, ஆள் குறைப்பில் முகவர்கள் ஈடுபடவில்லை.

தேர்தலுக்கு பின் முதல் காலாண்டில் ஏதேனும் மாற்றம் நிகழும் என வாகன முகவர்கள் எதிர் பார்த்தனர். தேர்தல் முடிவுகளும் சிறப்பாக வெளிவந்தன. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இதற்கு மாறாக, மந்த நிலை தொடர்ந்ததால், வேறு வழியின்றி ஆட்குறைப்பு செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

மனித சக்தி, மிகவும் முக்கியமானது. அவர்களின் பயிற்சிக்கு ஏராளமான பணம் செலவு செய்யப் பட்டுள்ளது என்பதால் ஆட் குறைப்பை முகவர்கள் கடைசி கட்ட நடவடிக்கையைாகத்தான் எடுத்து உள்ளனர். மந்த நிலை துவங்கியதும், முதலில், உற்பத்தியை குறைத்தனர். மற்ற செலவுகளை குறைத்தாலும் ஏப்ரல் வரை ஆட்குறைப்பை செய்யவில்லை.

ஆனால், தற்போது கடினமான முடிவாக இருந்தாலும், ஆட் குறைப்பு நடவடிக்கையை எடுத்து உள்ளனர்.பொருளாதாரத்தில், குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில், நிலவும் கடுமையான சூழ்நிலையை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது என நாங்கள் நம்புகிறோம். அடுத்த ஒரு சில நாட்களில் எங்களுக்கு அரசின் உதவி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை. நிரந்தரமாக குறைக்க வேண்டும் என நாங்கள் கூறவில்லை. வளர்ச்சி திட்டங்களுக்கு ஜிஎஸ்டி, அரசுக்கு எவ்வளவு முக்கியம் என்பது எங்களுக்கும் தெரியும். ஆனால், இந்த குறைப்பு ஆட்டோமொபைல் துறையை புத்துயிர் பெற செய்யும். நாட்டின் ஜிடிபியில் வாகன உற்பத்தி துறை 8 சதவீதம் உள்ளது” என்று அவர் கூறினார்.

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் அமைப்பின் புள்ளிவிவரப்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் ஜூன் மாதத்தில், 69,42,742 கார்கள் விற்பனையாகின. இந்த ஆண்டு , இந்த விற்பனை 12.35 சதவீதம் குறைந்து 60,85,406 ஆக இருந்தது.சில்லரை வர்த்த கத்தில், நடப்பு ஆண்டு, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், 54,42,317 வாகனங்கள் விற்பனையானது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 5 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், சில்லறை விற்பனை 51,16,718 ஆக இருந்தது. வாகனங்கள் விற்பனையில், பயணிகள் வாகனங்கள் விற்பனைதான் மோசமாக உள்ளது. ஜூலை மாத நிலவரப்படி, மாருதி சுசூகி விற்பனை 36.3 சதவீதம் குறைந்துள்ளது. ஹூண்டாய் விற்பனை 10சதவீதமும், எம்&எம் விற்பனை 16 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் பிவி விற்பனை 31 4தவீதமும், ஹோண்டா விற்பனை 48.67 சதவீதமும் குறைந்துள்ளது” என்றார்

அதே சமயம் ஆட்டோமொபைல் உற்பத்தியில் இந்தியா மிகவும் சிறந்து விளங்கினாலும் விற்பனையை பொறுத்தவரை, சர்வதேச அளவில் ஒப்பிடும்போது இந்தியர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் எண்ணிக்கை மிக மிக குறைவு. வாகனங்கள் பயன் படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமெனில் அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப் படவேண்டும்.மக்களின் வருமானம் பெருக வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.

aanthai

Recent Posts

ஒடிசா ரயில் விபத்து; 300 பயணிகள் பலி? 1000 பேர் படுகாயம்!

முன்னொரு காலம் ஒரிசா என்றழைக்கப்பட்ட ஒடிசாவில் சரக்கு ரயில் மீது மோதியதால் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஷாலிமர்…

10 hours ago

வீரன் – விமர்சனம்!

நம் தமிழ் சினிமாவில் பேண்டசி வகைக் கதைகள் அபூர்வம்.. அப்படியான கதைகளை கையாள தனி திறமை வேண்டும்.. அந்த வகையில்…

14 hours ago

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் – விமர்சனம்!

கோலிவுட்டில் பிரமாண்ட படங்களை எடுக்க ஷங்கர், செண்டிமெண்ட் படங்களுக்கு பாண்டிராஜ், கமர்சியல் படங்களுக்கு வெங்கட் பிரபு அல்லது அல்லது சுந்தர்…

1 day ago

50 ஆயிரம் கோடி வருமானம் பார்த்த IPL வரி ஏய்ப்பு செய்கிறதா?

இப்போது IPL வரி செலுத்தாமல் ஏமாற்றுகிறது என்றால் உபிஸ் தங்கள் கேடி பிரதர்ஸ் மற்றும், கோல்மால் புரத்தின் கார்ப்பரேட் முதலாளிகளைத்…

1 day ago

மல்யுத்த வீரர்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதா? – 1983-ல் உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் வேதனை!

அமித்ஷா ஆதரவாளரும், பாஜக எம்.பி-யுமான பிரிஜ்பூஷண் சரண் சிங்கை கைது செய்யக்கோரி மல்யுத்தவீரர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு 1983-இல் கிரிக்கெட்…

1 day ago

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 8 பேரின் ஆயுள் தண்டனை- ஐகோர்ட்உறுதி செய்து தீர்ப்பு!

சேலம் டிஸ்ட்ரிக் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015-ம் ஆண்டு ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில், தீரன் சின்னமலை பேரவை…

1 day ago

This website uses cookies.