துருக்கியில் நிலநடுக்கம் + சுனாமி!

துருக்கியில் நிலநடுக்கம் + சுனாமி!

துருக்கியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆகப் பதிவானது.

இதுகுறித்து துருக்கி மீட்புப் பணி அதிகாரிகள் கூறும்போது, “துருக்கியில் இன்று (வெள்ளிக் கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆகப் பதிவானது. ஏஜியன் கடலை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 16.5 கிலோ மீட்டர் ஆகும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/aanthaireporter/status/1322177431302668289

துருக்கியின் இஸ்மிர் நகரில் நிலநடுக்கம் காரணமாகப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுவரை உயிரிழப்பு ஏதுவும் ஏற்படவில்லை என்று துருக்கி அரசு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!