டிடிஎஃப் வாசன் ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்கில் கைது: ஒட்டுநர் உரிமம் ரத்து?
கோவை டிஸ்ட்ரிக் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டைச் சேர்ந்தவர் டி.டி.எஃப் வாசன். அதிநவீன மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை வீடியோவாக எடுத்து யூடியூபில் பதிவேற்றம் செய்து பிரபலமானவரிவர். அப்படி அதிவேக பயணம் காரணமாக ஏகப்பட்ட வழக்குகளையும் சந்தித்துள்ளார். டிடிஎஃப் வாசன் 2K கிட்ஸ்களுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறார் என்ற விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. அதேநேரம், டி.டி. எஃப். வாசனை யூடியூபில் சப்ஸ்கிரைப் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியுள்ளது.
இதனிடையே, செல்லம் என்ற இயக்குனர் இயக்கி வரும் மஞ்சள்வீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சாலைகளில் அதிவேகமாக செல்லும் டிடிஎqப் வாசனை பல முறை பலரும் கண்டித்தும், விமர்சித்தும் வந்த நிலையில் அவர் தொடர்ந்து இரு சக்கர வாகனங்களில் சாகச பயணம் மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில், நேற்று சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது, காஞ்சிபுரம் மாவட்டம் பாலுச்செட்டிசத்திரம் அருகே, தாமல் ஊர் பகுதி நெடுஞ்சாலையில் தனது பைக்கில் சாகசம் செய்ய முயற்சித்துள்ளார். அப்போது நிலை தடுமாறி அருகில் உள்ள சாலையோர பள்ளதாக்கில் விழுந்தார். இதில் டி.டி.எப் வாசனுக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டு கை எலும்பு முறிந்தது. இதனையடுத்து, அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த நிலையில் தற்போது சென்னையில் அவரது நண்பர் அபிஸ் என்பவரின் வீட்டில் பதுங்கி இருந்தபோது காஞ்சிபுரம் போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய தமிழக காவல்துறை பரிந்துரை செய்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மீது ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பிணையில் வெளிவர முடியாதபடி டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டுள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.