June 7, 2023

போலீஸ் டிப்பார்ட்மெண்டில் உள்ள கருப்பு ஆடுகளை கண்டுபிடிக்க உளவு பார்க்கும் (Intelligence Section) போலீஸ் படைக்கும், குழந்தைகளை வெளிநாடுகளுக்கு கடத்தும் ஒரு கும்பலுக்கும் இடையே நடக்கும் யுத்தம்தான், ‘ட்ரிகர்’.

கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் அனாதை விடுதியில் இருக்கும் ஏகப்பட்ட குழந்தைகள் 30 வருடத்துக்கு முன் பலரால் தத்தெடுக்கப் படுகின்றனர்.அந்த குழந்தைகளை ஒரு கூட்டம் 3 ஆண்டுகள் கழித்து கடத்தி வெளிநாட்டுக்கு விற்கிறது. இதை தடுக்க முயன்ற போலீஸ் அதிகாரி அருண்பாண்டியன் பின்னர் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி கிடக்கிறார். இச்சூழலில் அவரது மகன் அதர்வா மறைமுகமாக போலீ ஸுக்கு உதவும் பணியில் சேர்கிறார் அப்போது தான்யா நடத்தும் அனாதை இல்லத்தி லிருந்து குழந்தைகளை வில்லன் கூட்டம் திட்டமிட்டு கடத்துகிறது. அதை தடுக்க அதர்வா போராடுகிறார அவர் எப்படி குழந்தைகளை காப்பாற்றுகிறார். கடத்தல் கூட்ட தலைவனை எப்படி அழிக்கிறார் என்பது தான் டிரிகர் படத்தின் கதை.

காவல்துறை வேடத்துக்குப் பொருத்தமாக அதர்வா அமைந்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் அவருடைய வேகம் ஆச்சரியப்படுத்துகிறது. காவல்துறையில் உண்மையாக உழைத்ததால் பழிக்கு ஆளாகி மறதி நோய் வந்து அவதிப்படும் அருண் பாண்டியனின் நிதான நடிப்பு அருமை. கடைசிக் காட்சி கைதட்டல் பெறுகிறது.

சில காட்சிகளிலேயே வந்தாலும் நாயகி தான்யா தனது பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார். சின்னிஜெயந்த், முனீஸ்காந்த், அன்புதாசன், அறந்தாங்கி நிஷா, அழகம்பெருமாள், சீதா ஆகியோர் அவரவர் வேடத்துக்கேற்ப அருமையாக நடித்திருக்கிறார்கள்.

வில்லனாக வரும் ராகுல்தேவ் ஷெட்டி நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

ஜிப்ரானின் இசையில் பாடல் கேட்கும் ரகம் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்துக்கும், சண்டைக்காட்சிகளை அமைத்த திலீப்சுப்பராயனும் படத்தின் சக நாயகர்கள் எனலாம்.

ஆனாலும் அனாதை ஆசிரமம், குழந்தைக் கடத்தல் என மேலோட்டமாக பல படங்களில் பார்த்த விஷயமாக இருந்தாலும் அதில் நிறைய ‘டீடெய்லிங்’ கலெக்ட் செய்து அசத்தி இருக்கிறா இயக்குனர். அதற்காக ஹேக்கிங் மூலமே அப்டேட் ஆகும் ஹீரோ போக்கு மற்றும் அநாவசியமான செண்டிமெண்ட் காட்சிகளை நீக்கி 2 மணி நேரத்திற்குள் படத்தை முடித்திருக்கலாம்.

மொத்தத்தில் டிரிகர் அதர்வாவுக்கு பேர் பெற்றுத் தரும்.

மார்க் 3/5