இன்ஜினியர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு!

தமிழக அரசில் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கு டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காலியிடம்: ஜூனியர் டிராப்டிங் ஆபிசர் (நெடுஞ்சாலை 183, இன்ஜினியரிங் 348), ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 1 ஜூனியர் இன்ஜினியர் 5 என மொத்தம் 537 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஜூனியர் டிராப்டிங் ஆபிசர், ஜூனியர் இன்ஜினியர் பதவிகளுக்கு டிப்ளமோ சிவில், ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பிரிவுக்கு டெக்ஸ்டைல், ேஹண்ட்லுாமில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.7.2021 அடிப்படையில் பொது பிரிவினர் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், ஜூனியர் இன்ஜினியர் பதவிகளுக்கு வயது உச்ச வரம்பு இல்லை. ஜூனியர் டிராப்டிங் ஆபிசர் நெடுஞ்சாலை பதவிக்கு பி.சி., / எம்.பி.சி., 32, எஸ்.சி., / எஸ்டி., 33 வயதுக்குள், இன்ஜினியர் பதவிக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு.
தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், தஞ்சை.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
கட்டணம்: பதிவுக்கட்டணம் ரூ. 150, தேர்வுக்கட்டணம் ரூ. 100
கடைசி நாள்: 4.4.2021
விபரங்களுக்கு : ஆந்தைவேலைவாய்ப்பு