தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV) ற்கான எழுத்துத் தேர்வினை தேர்வாணையம் கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 24ந்தேதி (24.07.2022) அன்று நடத்தியது. இந்த தேர்விற்கு 22,02,942 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 18,36,535 விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்றனர் ஆனால், தேர்வு முடிந்து பல மாதங்களாகியும் முடிவுகள் வெளியாகவில்லை. எனவே, குரூப்-4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி விரைவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.
இதையடுத்து, , குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. ஆனால், தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடுவது குறித்த முறையான அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று தேர்வர்கள் டிவிட்டரில் பதிவிட்டு டிரெண்டிங் செய்தனர். #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. மேலும் இது தொடர்பான மீம்ஸ்களும் அதிகம் பகிரப்பட்டது.
இதையடுத்து, ஜ டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட அறிக்கையில், எவ்வித தவறுகளுக்கும் இடமளிக்காத வகையில் தேர்வாணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இரு பகுதிகளைக் கொண்ட ஒருங்கிணைந்த விடைத்தாள் முறையினால், விடைத்தாட்களின் இரு பகுதிகளையும் இருமுறை ஸ்கேன் செய்து, அதன் பின்னர் விண்ணப்பதாரர் விடைத்தாட்களில் செய்துள்ள பிழைகளை கணினி மூலம் அடையாளம் காணப்பட்டு அவற்றை அலுவலகர்கள் மூலம் நேரடி சரிபார்ப்பு மூலம் உறுதிசெய்யும் பணிகளுக்கு அதிகப்படியான கால அவகாசம் தேவைப்படுகிறது.
விடைத்தாட்களில் அறிவுரைகளை மீறி தேர்வர்களால் செய்யப்படும் ஏறக்குறைய 16 விதமான பிழைகளை சரிபார்க்க வேண்டியுள்ளது என்று தெரிவித்திருந்தது. கடந்த 5 ஆண்டுகளைக் காட்டிலும் இந்த முறை தேர்வர்களின் எண்ணிக்கை அதிகம். ஓஎம்ஆர்(omr) விடைத்தாள்களின் எண்ணிக்கை 36 லட்சத்துக்கும் கூடுதலாக உள்ளது. இதனால் தாமதமாக கூறியதுடன், மார்ச் மாதத்திற்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என உறுதி அளித்தது.
இந்த நிலையில், இன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் Group-4 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.
தேர்வர்கள் TNPSC Group4 Result இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
படத்தின் கதை என்னவென்றால் குடும்பத்தின் வறுமையின் காரணமாக ஏதாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று கிராமத்தில் இருந்து மூன்று இளைஞர்கள் சென்னை…
டெல்லியில் கடந்த ஐந்து மாதங்களாக ஒரு துயர நாடகம் அரங்கேறி வருகிறது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இயங்குபவர் ப்ரஜ்…
சென்னை சூப்பர் கிங்க்ஸ் கேப்டன் தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது.…
போன நிதியாண்டைக் காட்டிலும், நடப்பு 2022-23ஆம் நிதியாண்டில் 500 ரூபாய் கள்ளநோட்டின் எண்ணிக்கை 14 சதவிகிதம் அளவிற்கு அதி கரித்துள்ளது.…
முதலீட்டாளர்களைத் தமிழ்நாட்டை நோக்கி ஈர்த்திட சிங்கப்பூர்-ஜப்பான் நாடுகளுக்கு நான் மேற்கொண்ட 9 நாள் பயணத்தை நிறைவுசெய்து தாயகம் திரும்புகிறேன். என்…
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘போர் தொழில்’. இதில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா…
This website uses cookies.