ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் நீங்களே இணைக்க உதவும் அரசு ஆப்!

ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் நீங்களே இணைக்க உதவும் அரசு ஆப்!

வரும் ஆண்டில் சாதாரண ரேஷன் கார்டுக்குப் பதிலாக ஸ்மார்ட் ரேஷன் கார்ட் வழங்க தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது. அதற்காக ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இதற்காக மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளில் கால் கடுக்க நீண்ட வரிசையில் நின்று ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.

aadhar oct 5

இந்தப் பிரச்னையில் இருந்த விடுபட ரேஷன் கடைக்கே செல்லாமல் வீட்டிலிருந்தபடியே ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்க புதிய செயலி ன்றை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியைப் பயன்படுத்த ஸ்மார்ட் போன் இருந்தால் மட்டுமே சாத்தியம் ஆகும்.

TNEPDS – (Tamil Nadu E Public Distribution System) என்ற செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

குடும்பத்தலைவரின் மொபைல் எண்ணை முதலில் பதிவு செய்ய வேண்டும். அடுத்து, செயலியின் உள்செல்ல ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் அந்த பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு வரும். அதைப் பதிவுசெய்தபின் செயலியின் உள்ளே செல்லலாம்.

அதன் பின்பு ரேஷன் கார்ட் எண், ஆதார் எண்,ரேஷன் கார்டின் வகை, மாவட்டம், வட்டம், ரேஷன் கடையின் பெயர், ரேஷன் கடையில் தங்களின் எண், சிலிண்டர்களின் எண்ணிக்கை, குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை ஆகியவற்றைப் பதிவு செய்ய வேண்டும். இவை அனைத்தும் சரியாக உள்ளதா என ஒருமுறை சரிபார்க்க வாய்ப்பு வழங்கப்படும். அதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் உடனே சரி செய்துகொள்ளலாம். அதன் பின்பு தங்களின் குடும்ப அட்டை எண் போன்றவை “பதிவு செய்யப்பட்டது’ என்று தங்களின் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும்.

மேலும் இந்த செயலியின் மூலமாக தங்களுக்கான ரேஷன் பொருட்களின் அளவு, கடையில் உள்ள பொருள்களின் இருப்பு, மேலும் நீங்கள் வாங்கியுள்ள பொருட்களின் விவரம் அடங்கிய பட்டியல்கள் அனைத்தையும் இதில் நீங்கள் பார்க்கலாம். அதுமட்டுமல்ல, புகார்கள் ஏதேனும் இருந்தாலும் இதில் நீங்கள் பதிவு செய்யலாம்.

error: Content is protected !!