தமிழகத்தில் பெண்களில் நிலை என்ன தெரியுமோ?

தமிழகத்தில் பெண்களில் நிலை என்ன தெரியுமோ?

இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் மகளிருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுவிட்ட போதிலும் சமத்துவம், சுதந்திரம் போன்றவை மகளிருக்கு தொடுவானமாகவே தோன்றுகின்றன. மற்றொரு பக்கம் தமிழகத்தில் மகளிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் மகளிருக்கு எதிரான குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 37,577 ஆக அதிகரித்துள்ளது. சமூகச் சூழலை எடுத்துக் கொண்டால்,தமிழகத்தில், பெரும்பாலான அடித்தட்டு மற்றும் நடுத்தர குடும்பத்து பெண்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. பெண்ணுக்கு திருமணம் என்றாலே வரதட்சணை என்ற பெயரில் வியாபாரம் ஆக்கப்படுகிறது. பெண்கள் உயர்கல்வி பயில வேண்டுமென்றால் குறைந்த கட்டணத்தில் கல்வி கற்கும் நிலை தமிழ்நாட்டில் இல்லை. இதையெல்லாம் மீறி மிகுந்த சிரமத்திற்கு இடையே கல்வி கற்றாலும், அதற்குரிய வேலைவாய்ப்பு இல்லை.

woman may 22

இந்நிலையில் மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 15 வயதுக்குள் திருமணமானோர் 65,200 பேர் இருப்பது தெரியவந்துள்ளது.இந்திய அரசு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துகிறது. இதன்படி கடைசியாக கடந்த 2011 ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. அப்போது பதிவுசெய்யப்பட்ட பல்வேறு தரவுகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது.

நாடு முழுவதும் உள்ள பெண்களின் வயது, அவர்களது திருமண நிலை குறித்த தரவுகள் நேற்று வெளியிடப்பட்டன.அதன்படி தமிழகத்தில் மொத்தம் 3,60,09,055 பெண்கள் உள்ளனர். இவர்களில் திருமணமானோர் 2,32,23,396 பேர். இவர்களில் 65,200 பேருக்கு 15 வயதுக்குள் திருமணம் நடைபெற்றுள்ளது. 4,57,314 பேருக்கு 15 வயது முதல் 19 வயதுக்குள் திருமணம் நடைபெற்றதுள்ளது.

மேலும், மொத்தமுள்ள பெண்களில் 1,22,12,039 பேர் படிப்பறிவில்லாமல் உள்ளனர். அதுவும் 15 வயதுக்குள்பட்ட பெண்களில் 38,31,813 பேர் படிப்பறிவு இல்லாமல் இருக்கின்றனர். இதில் அதிகபட்சமாக 45 வயது முதல் 49 வரையுள்ள பெண்களில் 1.03 கோடி பேர் படிப்பறிவு இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது.2011 ஆம் ஆண்டு தரவுகளின்படி தமிழகத்தில் படித்த பெண்களின் எண்ணிக்கை 2.37 கோடியாக உள்ளது. இதில் அதிகபட்சமாக 44.20 லட்சம் பெண்கள் 15 வயதுக்குள்பட்டவர்கள். மேலும், 23.38 லட்சம் பேர் பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் படித்துள்ளனர்.

Related Posts