தமிழ்நாடு தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதல் பட்டியல்!

தமிழ்நாடு தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதல் பட்டியல்!

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு சட்டப்பேரவை தேர்தலில் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவன்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம் விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி (தனி), கோயம்புத்தூர் தெற்கு, விருது நகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, காரைக்குடி, தாராபுரம் (தனி), மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் களம் காண்கிறது.பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளில் முதற்கட்டமாக 17 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப் பட்டுள்ளது.

அந்த வகையில் வெளியான பட்டியல் இதோ:

தாராபுரம் (தனி ) -எல்.முருகன்
கோவை தெற்கு – வானதி சீனிவாசன்
காரைக்குடி -ஹெச் .ராஜா
அரவக்குறிச்சி -அண்ணாமலை
நாகர்கோவில் -எம்.ஆர்.காந்தி
ஆயிரம் விளக்கு -குஷ்பு
துறைமுகம் – வினோஜ் பி.செல்வம்
திருவண்ணாமலை – தணிகைவேல்
மொடக்குறிச்சி – சி.கே.சரஸ்வதி
திட்டக்குடி – பெரியசாமி
திருவையாறு – பூண்டி வெங்கடேசன்
மதுரை வடக்கு – சரவணன்
குளச்சல் -பி.ரமேஷ்
திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன்
ராமநாதபுரம் -டி.குப்புராமு
விருதுநகர் – பாண்டுரங்கன்
திருக்கோவிலூர் – வி.ஏ.டி.கலிவரதன்

Related Posts

error: Content is protected !!