செத்து பிழைத்தது வாட்ஸ் அப் உலகம்!

செத்து பிழைத்தது வாட்ஸ் அப் உலகம்!

லகம் முழுவதும் அதிகம் பேர் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ் அப் உள்ளது. சர்வதேச அளவில் பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். அதாவது இந்தியாவில் மட்டும் சுமார் 500 மில்லியன் பயனர்களையும், உலகளவில் 2.5 பில்லியனுக்கு அதிகமான பயனர்களையும் கொண்டுள்ளது அப்படி தகவல் பரிமாற்றத்தோடு நின்றுவிடாமல் தற்போது வீடியோ காலிங், போட்டோ வீடியோ பகிர்தல், வாய்ஸ் காலிங் வசதிகளையும் வாட்ஸ் அப் தனது பயனர்களுக்கு வழங்குகிறது.ஒரு நாளைக்கு கோடிக்கணக்கில் வீடியோக்கள் புகைப்படங்கள் முக்கியமான தகவல்கள் வாட்ஸ் அப் மூலம் பகிரப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாட்ஸ் அப் பாதுகாப்பு அம்சங்களில் மிகவும் கவனமாக செயல்பட்டு வரும் நிலையில் அடிக்கடி அப்டேட்டுகளும் விடப்பட்டு வருவதால் வாட்ஸ் அப் பாதுகாப்பானதாக இருக்கிறது.

ஆனால் அதிலும் சில குறைபாடுகள் ஏற்படுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட வாட்ஸ் அப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயற்சித்ததாக வாட்ஸ் அப் சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் பயனாளர்களுக்கு சில அறிவுரைகளும் வழங்கப்பட்டது. திடீரென ஹேக்கர்கள் அனுப்பிய லிங்குகளை ஓபன் செய்த வாடிக்கையாளர்கள் அவர்களது கணக்கு ஹேக் செய்யப்பட்டதை உணர்ந்தனர். வாடிக்கையாளர்கள் பலரும் தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு புகார்களை தெரிவித்தனர். இதையடுத்து வாடிக்கையாளர்கள் அனைவரும் உடனடியாக வாட்ஸ் அப்பை அப்டேட் செய்ய வேண்டும் என அந்த நிறுவனம் கூறியது.

இந்நிலையில் இன்று மதியம் உலகின் பல இடங்களில் வாட்ஸ் அப் செயலி திடீரென முடங்கியுள்ளதாக பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்தியாவிலும் சில நகரங்களில் இந்த சேவை குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் முக்கிய தகவல்கள் படங்கள் வீடியோக்களை லோட் செய்ய முடியவில்லை ஏற்கனவே வந்திருக்கும் தகவல்களையும் ஓபன் செய்து படிக்க முடியவில்லை என பயனர்கள் புகார் தெரிவித்து வந்தனர். அதையடுத்து டெலிகிராம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாக பயனாளர்கள் தகவலை பரிமாறி வந்தனர்.

இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறால் பகல் 12 மணி முதல் 2 மணி நேரமாக முடங்கிய வாட்ஸ் ஆப் சேவை இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் சீரானது.

அதே நேரத்தில் முடக்கத்திற்கான காரணம் என்ன என்பது குறித்தும் வாட்ஸ் அப் நிறுவனத்தின் தரப்பில் இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை

error: Content is protected !!