32°C

உடலின் உயிர்நாடி ‘புரதம்’: இன்று தேசிய புரதச்சத்து தினம்!

admin Published: February 27, 2026 2 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து:

மது உடலுக்குத் தேவையான சத்துக்களில் எது ‘நம்பர் 1’ என்று கேட்டால், தயக்கமே இல்லாமல் ‘புரதச்சத்து’ (Protein) என்று சொல்லலாம். வேடிக்கை என்னவென்றால், ‘புரதம்’ என்ற கிரேக்க சொல்லுக்கு ‘முதல்’ அல்லது ‘முதன்மையானது’ என்றுதான் அர்த்தம். அந்தப் பெயரிலேயே அதன் முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது. அந்த புரதச் சத்தின் ஆரோக்கிய நற்பலன்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஆண்டுதோறும் பிப்., 27ம் தேதி தேசிய புரதச் சத்து தினம் கொண்டாடப்படுகிறது.

புரதம் ஏன் இவ்வளவு முக்கியம்?

நமது உடல் தார்ச்சாலையைப் போலத் தேய்ந்து போகாமல் இருக்கவும், பழுதுபார்க்கவும் புரதம் அவசியம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

  • உடல் தசைகளை உறுதிப்படுத்தவும், அழகான முடி வளர்ச்சிக்கும் இது தேவை.

  • நோய் எதிர்ப்பு சக்தியைத் தூணாக நின்று காப்பதும் இந்த புரதம்தான்.

  • உடலில் சுரக்கும் அத்தியாவசிய ஹார்மோன்கள் மற்றும் சுரப்புகளுக்குப் புரதமே அடிப்படை.

உங்களுக்கு எவ்வளவு புரதம் தேவை?

நம்மில் பலருக்கு எவ்வளவு புரதம் சாப்பிட வேண்டும் என்பதில் குழப்பம் இருக்கிறது. ஆய்வுகளின்படி, நமது உடலின் ஒவ்வொரு கிலோ எடைக்கும் 0.8 கிராம் புரதம் அவசியம்.

உதாரணமாக:

  • உங்கள் எடை 90 கிலோ என்றால், ஒரு நாளைக்கு 72 கிராம் புரதம் தேவை.

  • அதுவே உங்கள் எடை 40 கிலோ என்றால், ஒரு நாளைக்கு 40 கிராம் புரதம் போதுமானது.

இப்போதெல்லாம் ‘ஜிம்’ செல்லும் ஆர்வம் பெருகியுள்ளதால், பலரும் அளவுக்கு அதிகமாகப் புரதம் எடுத்துக்கொள்கிறார்கள். தசை வளர்ச்சிக்காகப் பயிற்சி எடுப்பவர்கள் மட்டும், தங்கள் உடற்பயிற்சி நிபுணரிடம் ஆலோசித்துத் தேவையான அளவைச் சேர்த்துக் கொள்வது நல்லது.

எப்படிச் சாப்பிட வேண்டும்?

ஊட்டச்சத்து நிபுணர்கள் ஒரு முக்கியமான ரகசியத்தைச் சொல்கிறார்கள். மொத்த புரதத்தையும் ஒரே வேளையில் அள்ளிப் போடாமல், ஒரு நாள் முழுவதும் சிறு சிறு இடைவெளிகளில் பிரித்துச் சாப்பிடுவது (Protein snacks) உடலுக்கு அதிக நன்மைகளைத் தரும்.

ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க, இந்த புரத தினத்தில் விழிப்புணர்வு பெறுவோம்!

தரமான புரோட்டீன் எவற்றில் இருக்கிறது?

பால், முட்டை, கோழி, மீன் இவற்றிலிருப்பது தரமான புரதச்சத்து. அரிசியிலும் பருப்பிலும் இருப்பது தரமான புரோட்டீன் கிடையாது. ஆனால், இவையிரண்டையும் சேர்த்து இட்லியாகவோ, தோசையாகவோ சாப்பிடும்போது ஓரளவுக்கு தரமான புரதச்சத்து கிடைத்துவிடும். எப்படியென்றால், அரிசியில் இல்லாத அமினோ அமிலங்கள் பருப்பிலும், பருப்பில் இல்லாத அமினோ அமிலங்கள் அரிசியிலும் பேலன்ஸாகிவிடும். இருந்தாலும் பால் மற்றும் முட்டையில் உள்ள புரதத்துக்கு இது சமம் ஆகாது. மற்றபடி பயறு வகைகளில் புரதத்துடன் மாவுச்சத்தும் சேர்ந்தே இருக்கும். நட்ஸ் வகைகளில் புரதத்துடன் கொழுப்புச்சத்தும் சேர்ந்தே இருக்கும். சைவம் சாப்பிடுபவர்களுக்கு பால், பால் பொருள்கள், பயறு வகைகள், நட்ஸ் வகைகள்தான் புரதத்துக்கான வழிகள்.
நிலவளம் ரெங்கராஜன்