இந்தியாவில் ரத்தச் சோகையால் 50 சத பெண்கள் பாதிப்பு!

இந்தியாவில் ரத்தச் சோகையால் 50 சத பெண்கள் பாதிப்பு!

ந்திய அளவில் ஐம்பது சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் ரத்தச் சோகை குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

மக்கள்தொகை, இனப்பெருக்கம், குழந்தைகள் நலன், ஊட்டச்சத்து மற்றும் பிற ஆரோக்கியம் சார்ந்த ஆய்வுகளை தேசிய குடும்ப சுகாதார ஆய்வு என்ற பெயரில் ஒன்றிய குடும்ப நல அமைச்சகம் ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகிறது.
இந் நிலையில், அருணாசலப் பிரதேசம், சண்டிகர், சத்தீஸ்கர், ஹரியானா, ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், டெல்லி, ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட ஆய்வுகளை இந்திய குடும்ப நல அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

பெண்களுக்கு ரத்த சோகை

இதில் குழந்தைகளின் ஊட்டச்சத்து விகிதத்தில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது ஊட்டச்சத்து குறைபாடு 38 இல் இருந்து 36 சதவிகிதமாகவும், உணவை வீணாக்குவது 21இல் இருந்து 19 சதவிகிதமாகவும், குறைந்த எடை கொண்ட குழந்தைகளின் விகிதம் 32இல் இருந்து 30 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது.

குழந்தைகளின் ஊட்டச்சத்து விகிதத்தில் சற்று முன்னேற்றம் காணப்பட்டாலும், 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் ரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 180 நாட்களுக்கு மேலாக கர்ப்பிணி பெண்களுக்கு இரும்புசத்து மாத்திரைகள் வழங்கப்பட்ட போதும், ரத்தச் சோகை பாதிப்பு குறையவில்லை. இந்த விகிதம் கடந்த முறையை விட அதிகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015-16 இல் ஆறு மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பது 55 சதவிகிதமாக இருந்தது. இந்த எண்ணிக்கை 2019-21இல் 64 சதவிகிதமாக உயர்ந்தது. குழந்தைகள் பிறப்பு விகிதம் 79-89 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறப்பு விகிதம் 100 ஆக உயர்ந்துள்ளது என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts