அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் முதல் கறுப்பின பெண் நீதிபதி!

அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் முதல் கறுப்பின பெண் நீதிபதி!
மெரிக்க உச்சநீதிமன்றம் 233 ஆண்டுகால வரலாறு கொண்டது. அதில், இதுவரை 5 பெண் நீதிபதிகளே இருந்து வந்த நிலையில் தற்போது 6வது பெண் நீதிபதியாக கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் நியமிக்கப்பட உள்ளார். ஆனால், முதல் கறுப்பின பெண் நீதிபதியாக கேடான்ஜி பதவியேற்க உள்ளார். இதற்கு முன்பு 2 ஆண் கறுப்பின நீதிபதிகள் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
யார் இந்த கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் ?
 
பள்ளிப்படிப்பை முடித்த கேடான்ஜி பிரவுன், ஹார்வர்ட் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து, ஹார்வர்ட் சட்டப் பள்ளியில் சட்டமும் படித்து முடித்தார். அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் பொதுப் பாதுகாவலராகப் பணியாற்றிய ஒரே நீதிபதி கேடான்ஜி என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கும், முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு நல்ல நட்பு இருந்துள்ளது. அதற்கு காரணம் இருவரும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள். அதள் விளைவாக, அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரவுன் ஜாக்சனை நீதிபதியாக பரிந்துரைத்தார். இதையடுத்து, 2010ம் ஆண்டு பிரவுன் ஜாக்சன் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதன்பின்னர், சமீபத்தில் நடந்துமுடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் தனது தேர்தல் வாக்குறுதியிலேயே கறுப்பின ஆப்ரிக்க அமெரிக்கரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பது குறித்து பேசியிருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
முன்னதாக வயது மூப்பு காரணமாக அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ஸ்டீபன் பிரையர் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். அந்த இடம் தற்போது காலியாக உள்ளதால் நீதிபதி நியமனத்துக்கு பல பெயர்கள் அடிபட்டது. 51 வயதாகும் பிரவுன் ஜாக்சன் இறுதியாக நியமிக்கப்பட்டு அமெரிக்க செனட்சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு கமலா ஹாரிஸ் தலைமைத் தாங்கினார். 100 உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்க செனட் சபையில் ஜனநாயகக் கட்சிக்கு 50 வாக்குகளும், குடியரசுக் கட்சிக்கு 50 வாக்குகளும் என சமமாக பிரிக்கப்பட்டது. இதில், 53 வாக்குகள் பெற்று அமெரிக்காவின் முதல் கறுப்பின பெண் நீதிபதியாக பிரவுன் ஜாக்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார். வாக்கெடுப்பு முடிந்து வெற்றி உறுதியான பின்பு, செனட் சபையில் பலத்தக் கைத்தட்டல் எழுப்பி பிரவுன் ஜாக்சனை உறுப்பினர்கள் வரவேற்றனர்.
இதையடுத்து, விரைவில் நீதிபதி ஸ்டீபன் பிரேயர் ஓய்வு பெறவுள்ளார். அவர் ஓய்வு பெற்ற பிறகு அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் 116வது நீதிபதியாக பிரவுன் ஜாக்சன் பொறுப்பேற்க இருக்கிறார். உலகெங்கிலும் இணையதளம் வாயிலாக அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. வாழ்த்துகள் பிரவுன்.!
அடிசினல் ரிப்போர்ட்:
நீதிமன்ற அமைப்புகள் உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளுக்கும் ஏற்றார் போல் மாறுபடும். இந்திய உச்சநீதிமன்ற அமைப்புகளில் இருந்து முற்றிலும் மாறானது அமெரிக்க உச்சநீதிமன்ற அமைப்பு. அதாவது, இந்தியாவில் பணிபுரியும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலம் 65 வயது வரை மட்டுமே. ஆனால், அமெரிக்க உச்சநீதிமன்ற அமைப்பில் ஓய்வுக்கான வயதுவரம்பு இல்லை. வாழ்நாள் முழுவதும் அவர்கள் நீதிபதிகள்தான். சுய விருப்பத்தின்பேரில் வேண்டுமானால் ஓய்வு பெறலாம். செனட் சபை ஒப்புதலின்படிதான் அமெரிக்காவில் நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள். மேலும், பெரும்பாலான வழக்குகள் உச்சநீதிமன்றத்துக்கே வராது. உச்சநீதிமன்றத்திற்கு கீழே உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றங்களும், மாவட்ட, மாகாண நீதிமன்றங்களுமே பெரும்பாலான வழக்குகளை தீர்த்துவிடும். அரிதான வழக்குகளை மட்டுமே உச்சநீதிமன்றம் விசாரிக்கும்.
error: Content is protected !!