174 பயணிகளுடன் 16 ஆயிடம் அடியில் வானில் பறந்த விமானத்தின் கதவு பெயர்ந்ததில் களேபரம்!

174 பயணிகளுடன் 16 ஆயிடம் அடியில் வானில் பறந்த விமானத்தின் கதவு பெயர்ந்ததில் களேபரம்!

பொதுவாக ஒரு விமானம் மேலெழுந்து பறக்கும் முன் கதவுகள் மூடப்பட்டதும் காற்று புகமுடியாத அளவு (Airtight) ஒன்றும் ஆவது இல்லை. ஆனாலும் பொதுவாக 8,000 – 10,000 அடி உயரம் வரை, மனிதர்கள் எந்த தடையும் இன்றி இலால்பகவே சுவாசிக்க முடியும். இந்த குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் விமானம் மேல் எழும்பும் போது இயல்பான அளவு காற்று எல்லோருக்கும் சுவாசிக்க கிடைக்க காற்றுஅழுத்தம் (Cabin Airpressure) அதிகரிக்க படுகிறது விமானத்தின் உள்ளே.விமானத்தின் என்ஜின் வழியாக உள் இழுக்க படுகின்ற காற்றில் ஒரு பகுதி, விமானத்தின் பயணிகள் பகுதிக்கு தொடர்ச்சியாக உள் செலுத்தப்படுவதால், 40,000 அடியில் விமானம் பயணித்தாலும் தரையில் நம்மால் சுவாசிப்பதை போல் சுவாசிக்க முடியும். ஆனால் அலாஸ்கா ஏர்லைன்ஸ் போயிங் 737 மேக்ஸ் 9 ரக விமானம் ஒன்று பயணிகளுடன் புறப்பட்ட நிலையில், 16,000 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மையப்பகுதியில் உள்ள கதவு பெயர்ந்து பறந்ததால் பயணிகள் பெருங்கூச்சல் எழுப்பியதால் உரிய முறைப்படி விமானம் தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிர்ஷ்டவசமாக பயணித்த யாருக்கும் பாதிப்பில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

அலாஸ்கா ஏர்லைன்ஸ் போயிங் ஏகப்படட்ட விமானங்களை இயக்கி வருகிறது. அந்த வகையில்அமெரிக்காவின் பெரிய விமானச் சேவை நிறுவனங்களில் ஏழாவது இடத்தை பெற்றுள்ள இந்த நிறுவனம் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் 9 ரக விமானம்தான் பறந்து கொண்டிருந்தபோதே, திடீரென கதவு பெயர்ந்து பறந்துள்ளது. அலாஸ்கா ஏர்லைன்ஸ் போயிங் 737 மேக்ஸ் 9 ரக விமானம் அமெரிக்காவின் போர்ட்லேண்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சம்பவத்தன்று மாலை புறப்பட்டது. சுமார் 171 பயணிகள், 63 ஊழியர்களுடன் சென்ற அந்த விமானம் மெல்ல மெல்ல மேலே பறந்தது. அப்போது சுமார் 16,000 அடி உயரத்தில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது , திடீரென விமானத்தின் மைய பகுதியில் இருந்த கதவு பெயர்ந்து, பறந்து சென்றது. அப்படி பறந்துகொண்டிருந்த விமானத்தில் இருந்து கதவு ஒன்று பறந்து சென்றுள்ளதால் பயணிகள் அலறினர். தொடர்ந்து அலறல் சத்தத்தை கேட்டு வந்த ஊழியர்கள், இதுகுறித்து விமான கட்டுப்பாடு மையத்துக்கு தெரிவித்தனர். தொடர்ந்து பயணிகளின் பாதுகாப்பை கருதி, விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து இந்த விமானத்தில் பயணம் செய்த 171 பயணிகள், 63 ஊழியர்கள் என யாருக்கும் எதுவும் ஆகவில்லை என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு (2023) சான்றிதழ் பெறப்பட்டு நவம்பர் மாதம் முதல் வர்த்தக பயன்பாட்டுக்கு வந்த இந்த போயிங் ரக விமானம் இதுவரை 145 முறை விமான பயணத்தில் ஈடுபட்டு உள்ளது. இந்த நிகழ்வு குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இது குறித்து விமானத்தில் பயணித்தவர்கள், ‘இது ஒரு கொடுங்கனவு’ என விவரிக்கின்றனர். 22 வயது பயணி ஒருவர், “நான் கண் விழித்ததும் முதலில் பார்த்தது எனக்கு முன்னால் இருந்த ஆக்ஸிஜன் மாஸ்கைதான். பின்னர் எனது இடது பக்கம் பார்த்தேன், அந்தப் பக்கம் இருந்த விமானத்தின் கதவு காணாமல் போயிருந்தது. அப்போது நான் இறந்து விடுவேன் என்றுதான் எனக்கு முதலில் தோன்றியது” என்று தெரிவித்திருந்தார்.

விமான பாதுகாப்பு நிபுணர் அந்தோணி பிரிக்ஹவுஸ் கூறுகையில், “அந்தப் பயணிகள் எதிர்கொண்ட பயங்கர அனுபவத்தை என்னால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. அந்தச் சம்பவம் பயங்கர சத்தத்துடன் இருந்திருக்கும். காற்று அதிகமாக விமானத்துக்குள் நுழைந்திருக்கும். நிச்சயமாக இது ஒரு பயங்கரமான சூழ்நிலை தான்” என்று தெரிவித்திருந்தார்.

இச்சம்பவம் குறித்து போயிங் விமான தயாரிப்பு நிறுவனம், “அலாஸ்கா ஏர்லைன்ஸின் ஏஎஸ்1282 விமானத்துக்கு நிகழ்ந்த சம்பவம் குறித்து நாங்கள் அறிந்துள்ளோம். அதுகுறித்து கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள முயன்று வருகிறோம் மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். விசாரணையில் ஒத்துழைப்பு வழங்க போயிங்க் தொழில்நுட்ப குழு உதவ தயாராக இருக்கிறது” என்றும் மேலும், அனைத்து 737 மேக்ஸ் விமானங்களிலும் கதவுகளுக்கான ரப்பர் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட விசயங்களை ஆய்வு செய்ய கடந்த வாரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது என்றும் கூறியுள்ளது.

இதுகுறித்து பெடரல் ஏவியேசன் அட்மினிஸ்ட்ரேசன், விமானத்தில் காற்றழுத்தப் பிரச்சினை இருந்ததாக விமானப் பணியாளர்கள் குழு தெரிவித்திருந்தது. இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது” எனவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே இப்படி நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் நடு பகுதியில் உள்ள கதவு பெயர்ந்து பறந்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி பல்வேறு கருத்துகளை வாங்கி வருகிறது.

error: Content is protected !!