சூடானில் முழுபோர் வெடிக்கும் அபாயம் – ஐநா முன்னாள் தூதர் எச்சரிக்கை!

சூடானில் முழுபோர் வெடிக்கும் அபாயம் – ஐநா முன்னாள் தூதர் எச்சரிக்கை!

டக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் அப்தெல் ஃபட்டா அல்-புா்ஹான் தலைமையிலான இராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் துணை இராணுவப் படைக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக கடந்த ஏப்ரல் 15-ஆம் திகதி முதல் சண்டை நடந்து வருகிறது. இதில், இதுவரை 4 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் போ் வரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே நடந்து வரும் மோதல் முழு போராக வெடிக்கும் அபாயம் உள்ளதாக அந்த நாட்டுக்கான ஐ.நா. சிறப்புத் தூதர் பொறுப்பிலிருந்து ராஜிநாமா செய்துள்ள வோல்கர் பொதீஸ் எச்சரித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக சூடானின் ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே அதிகாரப் போட்டி முற்றி வருகிறது. அவ்வப்போது இருதரப்பினர் இடையே தாக்குதல்களும் வெடித்ததுண்டு. அப்படி சனிக்கிழமை வெடித்த மோதலில், இருதரப்பும் தேச பாதுகாப்புக்கான ராணுவத் தளவாடங்களை பயன்படுத்த தொடங்கினர். இந்த வகையில், மோதலுக்கு சற்றும் தொடர்பில்லாத அப்பாவி பொதுமக்கள் 4 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே நேற்று இருதரப்பினர் இடையிலான பேச்சுவார்த்தையின் புதிய முன்னேற்றமாக, போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது.

ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் அந்த ஒப்பந்தத்தை மீறி இருதரப்பும் பரஸ்பரம் தாக்கிக்கொண்டதில், மேலும் 100க்கும் மேலான அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள். சூடானில் வெடித்திருக்கும் ஆயுத மோதல், அப்பாவி பொதுமக்களின் உயிருக்கு எழுந்திருக்கும் அச்சுறுத்தல் ஆகியவற்றின் மத்தியில், அங்கிருக்கும் இந்தியர்களை மீட்பதற்கான குரல்கள் இந்தியாவில் எதிரொலித்து வருகிறது. இதனிடையே இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஐ.நா.வால் நியமிக்கப்பட்ட சிறப்பு தூதர் வோல்கா் பொதீஸ், ஆர்எஸ்எஃப் படைக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி, அவரை நிராகரிப்பதாக சூடான் ராணுவம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அவர் தனது பொறுப்பிலிருந்து விலகினார்.

மேலும் , ஐ.நா. சிறப்புத் தூதர் பொறுப்பிலிருந்து ராஜிநாமா செய்துள்ள வோல்கர் பொதீஸ் ஐ.நா.வில் , சூடானில் ராணுவம், ஆர்எஸ்எஃப் துணை ராணுவம் ஆகிய இரண்டு தரப்பினருக்கும் இடையே சண்டை முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. இரு படைகளில் ஏதாவது ஒன்று வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் தற்போதைக்கு இல்லை. முக்கியமாக, மேற்கே உள்ள டார்ஃபர் பிராந்தியத்தில் நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது. அங்கு இனத்தின் அடிப்படையில் பொதுமக்கள் இரு படையினராலும் குறிவைக்கப்படுகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் அங்கு முழு போர் வெடிக்கும் அபாயம் உள்ளது என்றார்.

error: Content is protected !!