எண்ணெய் அரசியலின் ரத்தச் சரித்திரம்: மதுரோவும் 330 பில்லியன் பீப்பாய் ரகசியமும்!
வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு, அமெரிக்காவிற்கு கடத்திச் செல்லப்பட்டிருப்பது உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா சொல்லும் ‘போதைப்பொருள் கடத்தல்’ அல்லது ‘ஜனநாயகம்’ என்பது வெறும் வெளிப்பூச்சு மட்டுமே. இந்த ஆக்கிரமிப்பிற்குப் பின்னால் இருக்கும் உண்மையான வில்லன் ‘பெட்ரோ-டாலர்’ (Petro-Dollar) எனும் அமெரிக்காவின் பொருளாதார ஏகபோகம்.
💰 பெட்ரோ-டாலர்: ஒரு 50 ஆண்டு கால மிரட்டல்
1974-ல் ஹென்றி கிஸ்ஸிங்கர் சவுதியுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார்: “உலக நாடுகள் அனைத்தும் எண்ணெயை டாலரில் மட்டுமே வாங்க வேண்டும், பதிலுக்கு அமெரிக்கா ராணுவப் பாதுகாப்பு தரும்.” இந்த ஒரு ஒப்பந்தம்தான் அமெரிக்காவை உலகின் முதன்மை பொருளாதார சக்தியாக வைத்திருக்கிறது. இதனால் அமெரிக்காவால் வரம்பில்லாமல் டாலரை அச்சிட முடிகிறது; மற்ற நாடுகள் அந்த காகிதத்திற்காக உழைக்க வேண்டியுள்ளது.

🛢️ வெனிசூலா செய்த ‘மகா குற்றம்’ என்ன?
வெனிசூலாவிடம் 330 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருப்பு உள்ளது. இது சவுதி அரேபியாவை விடவும் அதிகம்.
-
யுவான் வர்த்தகம்: மதுரோ எண்ணெயை டாலருக்குப் பதிலாக சீன யுவானில் விற்கத் தொடங்கினார்.
-
BRICS கூட்டணி: டாலர் ஆதிக்கத்தை உடைக்கும் BRICS அமைப்பில் சேர மனு கொடுத்தார்.
-
SWIFT தவிர்ப்பு: அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள SWIFT பணப்பரிமாற்ற முறைக்கு மாற்றாக சீனாவுடன் நேரடி கட்டண வழிகளை உருவாக்கினார்.
மேற்கண்ட காரணங்களால் மெரிக்காவிற்குத் தேவை வெனிசூலாவின் ஜனநாயகம் அல்ல; அங்கிருக்கும் உலகின் 20% எண்ணெய் மீண்டும் டாலர் சந்தைக்குள் வரவேண்டும் என்பதுதான் என்பது புரிந்து விட்டதா?
💀 வரலாற்றின் ரத்தக் கறைகள்: சதாமுக்கும் கடாபிக்கும் நடந்தது என்ன?
மதுரோவிற்கு இன்று நடப்பது ஒன்றும் புதியதல்ல. பெட்ரோ-டாலரைச் சவால் செய்த எவருமே நிம்மதியாக இருந்ததில்லை.
-
2003 ஈராக்: சதாம் ஹுசேன் எண்ணெயை யூரோவில் விற்க முயன்றார். பேரழிவு ஆயுதங்கள் (WMD) இருப்பதாகப் பொய் சொல்லி ஈராக் ஆக்கிரமிக்கப்பட்டது. சதாம் கொல்லப்பட்டார்.
-
2011 லிபியா: கடாபி ‘தங்க தினார்’ என்ற ஆப்பிரிக்க நாணயத்தை முன்மொழிந்தார். நேட்டோ குண்டு வீசியது, கடாபி கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
இன்று மதுரோவின் முறை. சதாம் மற்றும் கடாபியை விடவும் ஐந்து மடங்கு அதிக எண்ணெய் மதுரோவிடம் உள்ளது. இது அமெரிக்காவிற்குத் தாங்க முடியாத பொருளாதார அச்சுறுத்தல்.
📉 வீழும் டாலர் ஆதிக்கம்: டி-டாலரைசேஷன் (De-dollarization)
அமெரிக்கா எவ்வளவு குண்டு வீசினாலும் ‘பெட்ரோ-டாலர்’ ஏற்கனவே இறந்து கொண்டிருக்கிறது.
-
ரஷ்யா தனது எண்ணெயை ரூபிளிலும் யுவானிலும் விற்கிறது.
-
சவுதி அரேபியா யுவான் வர்த்தகம் பற்றிப் பேசிவருகிறது.
-
பிரிக்ஸ் (BRICS) நாடுகள் டாலரைத் தவிர்க்கத் தொடங்கிவிட்டன.
அமெரிக்காவின் இந்த அதிரடி ஆக்கிரமிப்பு மற்ற நாடுகளைப் பயமுறுத்துவதற்குப் பதிலாக, டாலரை விட்டு இன்னும் வேகமாக வெளியேறவே தூண்டும்.
🦉 ஆந்தை பார்வை:
1990 ஜனவரி 3-ல் பனாமாவின் நோரியாகா கைது செய்யப்பட்ட அதே பாணியில், 36 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மதுரோ கைது செய்யப்பட்டுள்ளார். இது தற்செயலானது அல்ல; இது ஒரு திட்டமிடப்பட்ட காலனியாதிக்கம்.
“உங்கள் நாணயத்தை உலகைப் பயன்படுத்த வைக்க நீங்கள் குண்டு வீச வேண்டியிருக்கிறது என்றால், அந்த நாணயம் ஏற்கனவே செத்துவிட்டது என்றுதான் அர்த்தம்.” பெட்ரோ-டாலரை இனி ‘ஜியோ டாலர்’ (Zio Dollar) என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும். வெனிசூலா ஒரு ஆரம்பம் அல்ல; அது டாலர் சாம்ராஜ்யத்தின் அவசரமான, வன்முறையான முடிவு!
விக்கி


