பால் உற்பத்தியில் இந்தியா 2026ம் ஆண்டு முதலிடம்!

பால் உற்பத்தியில் இந்தியா 2026ம் ஆண்டு முதலிடம்!

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு 2017 முதல் 2026ம் ஆண்டு வரையில் விவசாயம் தொடர்பான தனது கண்ணோட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன் முக்கிய விவரங்கள்:

உலக மக்கள் தொகை அடுத்த பத்தாண்டுகளில் 730 கோடியில் இருந்து 820 கோடியாக அதிகரிக்கும். அதில் இந்தியா மற்றும் சஹாரா ஆப்பிரிக்காவின் பங்கு 56 சதவீதமதாக இருக்கும்.2026ல் இந்தியாவின் மக்கள் தொகை 150 கோடியாக உயரும். அப்போது மக்கள் தொகையில் இந்தியா சீனாவை முந்தி விடும்.மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக இந்தியா மற்றும் சஹாரா ஆப்பிரிக்கா நாடுகளில் தேவை அதிகரிக்கும்.

இருபத்தொன்றாம் நூற்றாண்டின் முதல் 25 ஆண்டுகளில் இந்தியாவின் பால் உற்பத்தி 3 மடங்கு அதிகரித்துள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் இது இன்னும் 49 சதவீதம் அதிகரிக்கும். ஆக, அப்போது பால் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் முதலிடத்தில் இருக்கும். ஐரோப்பிய ஒன்றியம் அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும்.

அடுத்த பத்தாண்டுகளில் கோதுமை உற்பத்தி 11 சதவீதம் உயரும். விளைச்சலை அதிகரிப்பதன் மூலம் இது சாத்தியமாகும். அதேசமயம் கோதுமை பயிரிடும் பரப்பு 1.8 சதவீதம் என்ற அளவிலே அதிகரிக்கும். 2026ம் ஆண்டில் ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் கோதுமை உற்பத்தியில் 46 சதவீத பங்களிப்பை கொண்டிருக்கும்.இந்தியா, பாகிஸ்தான், சீனா நாடுகளில் கோதுமை உற்பத்தி அதிகரிக்கும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கோதுமை உற்பத்தி 13 சதவீதம் கூடும்.

2026ல் அரிசி உற்பத்தி உலக அளவில் 12 சதவீதம் அதிகரிக்கும். இந்தியா, இந்தோனேஷியா, மியான்மர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் இதில் முன்னிலை வகிக்கும்.

அடுத்த பத்தாண்டுகளில் உணவுப் பொருள்களின் தேவை அதிகரித்தாலும், விலை கட்டுக்குள் இருக்கும்.
இவ்வாறான தகவல்கள் அந்தக் கண்ணோட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

error: Content is protected !!