கச்சதீவினை பொறுத்தவரை இவ்வளவுதான் செய்யமுடியும்!
கச்சதீவு மீட்கபடுமா என பலர் கேட்பதால் அதிலுள்ள சில சாத்தியங்களை மட்டும் சொல்கின்றோம். அந்த காலகட்டம் வங்கபோருக்கு பின் பாகிஸ்தானோ அமெரிக்காவோ இலங்கையில் கால்பதிக்க திட்டமிட்ட காலம், 1970கள் அப்படித்தான் இருந்தன. இலங்கையின் திரிகோணமலை துறைமுகத்தை அந்நாடுகள் குறிவைத்தபொழுது இந்தியாவுக்கு அதை தடுக்க சில ராஜதந்திர வழிகள் தேவைபட்டன,
அப்பொழுது ஈழசிக்கல் இல்லை .புலிகள் பெரிதாக உருவாகியிருக்கவில்லை என்பதால் சில விட்டு கொடுப்புகள் அவசியமாயின. இந்தியாவின் அம்பேத்கர் தொகுத்த சட்டபடி இந்நாட்டின் ஒரு சென்ட் நிலத்தை கூட அந்நிய நாட்டுக்கு கொடுக்க உரிமை இல்லை, அதன்படி இந்திரா செய்தது ஒரு ஒப்பந்தமே தவிர முழுமையாக இலங்கையிடம் கச்சதீவினை கொடுத்தது அல்ல . அந்த ஒப்பந்தபடி இந்திய மீனவர்களுக்கு அங்கு செல்லவும் வலை உலர்த்தவும் அனுமதி உண்டு. இந்தியாவிற்கு சொந்தமான கச்சதீவில் இலங்கை கால்வைப்பதை போல, திரிகோணமலையினை இந்தியா பயன்படுத்தும் அதுவும் எண்ணெய் வர்த்தகத்துக்கு மட்டும் பயன்படுத்தும் என்பது. இதில்தான் இரு நாடுகளும் இறங்கி வந்தன.
இந்தியா கச்சதீவை விட்டுகொடுக்க காரணம் பல உண்டு, முதலில் அங்கு மனிதர்கள் யாருமில்லை குடிக்க கூட நீர் இல்லா இடமது, அங்கு போர்ச்சுகீசிய கிறிஸ்தவ துறவியான அந்தோணியாருக்கு ஒரு ஆலயம் உண்டு அவர் கூட அப்பக்கம் செல்வதில்லை. அப்படிபட்ட கச்சதீவு கடத்தலுக்கும் இன்னும் பலவகையான சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் அக்காலத்தில் இடமானது, அதை தடுக்க பந்தை இலங்கையிடம் தட்டிவிட்டது இந்தியா. இந்த பின்னணியில்தான் அந்த கச்சதீவு ஒப்படைக்கபட்டது,
அப்படியே இலங்கையின் திரிகோணமலை துறைமுக கட்டுப்பாடு இந்தியா கைக்கு வந்தது இன்றும் அங்கு இந்தியநிலைகள் உண்டு . ஆக கச்சதீவினை திரும்ப பெறுவது சாத்தியமல்ல, அப்படி செய்தால் திரிகோணமலையில் இந்தியா சிக்கலை சந்திக்கும். இதனால் கச்சதீவினை மீட்கும் அவசியமில்லை, மீட்கும் அளவு அங்கு ஒன்றுமில்லை. இப்பொழுது செய்யவேண்டியது கச்சதீவில் தமிழக மீணவர்குரிய உரிமையினை மீட்டெடுத்து அங்கு வலை உலர்த்தவும் ஓய்வெடுக்கவும் சில சலுகைகளை பெற்றுகொடுப்பது, அங்கு சட்டவிரோத காரியம் நடக்காமல் இருக்க இந்திய இலங்கை கூட்டு பாதுகாப்பை வலுபடுத்தலாம். அது இன்னும் நல்லது. கச்சதீவினை பொறுத்தவரை இவ்வளவுதான் செய்யமுடியும் அதற்கு மேல் எதுவும் செய்யவேண்டுமென்றால் ரஷ்யா உக்ரைனில் செய்தது போலத்தான் செய்யவேண்டும் அந்த மடதனமான முடிவினை இந்தியா எடுக்காது