தைப் பூசம் திருநாள் – இனி தமிழக அரசு விடுமுறை!

தைப்பூசத் திருவிழா நாளை, பொது விடுமுறையாக அறிவித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதற்கான அரசாணை இன்று மாலை வெளியிடப்பட்டது.
தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: தமிழ் கடவுளாகிய முருகப் பெருமானை சிறப்பித்து தமிழகத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. இலங்கை, மொரீஷியஸ் நாடுகளில் தைப்பூசத் திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிப்பது போன்று தமிழகத்திலும் தைப்பூசத் திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர்.
இக்கோரிக்கையை பரிசீலித்து வரும் ஜன.,28ம் தேதி கொண்டாடப்படும் தைப்பூசித் திருவிழாவை, பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.