ட்ரெயின் லேட்டா போய் சேர்ந்தா நஷ்ட ஈடு! – தேஜஸ் ரயில் தகவல்!

ட்ரெயின் லேட்டா போய் சேர்ந்தா நஷ்ட ஈடு! – தேஜஸ் ரயில் தகவல்!

நம்ம இண்டியன் ரயில்வேகளில் பெரும்பாலானவை குறித்த நேரத்தில் செல்லும் என்றாலும் சிலபல சமயங்களில் மிகவும் லேட்டாக போய் செருவது வாடிக்கைதான். இந்நிலையில் ஐஆர்சிடிசியின் கட்டுப்பாட்டில் இயங்கவிருக்கும் பயணிகள் ரயிலான தேஜஸ் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு தாமத பயணங்களுக்கு இழப்பீடு வழங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கவிருக்கும் முதல் பயணிகள் ரயிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் லக்னோ-டெல்லி மார்க்கத்தில் இயங்க விருக்கிறது. இந்த ரயில் பயணத்தில் கால தாமதம் ஏற்பட்டால் அந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க இருப்பதாக ஐஆர்சிடிசி நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டால் 100 ரூபாய் இழப்பீடும், இரண்டு மணி நேரத்திற்கு மேல் தாமதம் ஏற்பட்டால் 250 ரூபாய்இழப்பீடும் வழங்கப்படும் என்று கூறப் பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல், பயணிகளுக்கும் அவர்களது உடைமைகளுக்கும் காப்பீடு வழங்குகிறது ஐஆர்சிடிசி. தேஜஸ் ரயிலில் பயணிக்கும் போது பயணிகள் உயிரிழக்க நேர்ந்தாலோ அல்லது விபத்தினை எதிர்கொள்ள நேர்ந்தால் 25 லட்சம் ரூபாய் காப்பீடும், உடைமைகள் திருட்டு போனால் 1 லட்சம் ரூபாய் காப்பீடும் வழங்க இருக்கிறது.

இது மட்டுமல்லாமல், தேஜஸ் ரயில் பயணிகளுக்கென்று ப்ரத்யேக வசதி செய்யப்பட இருக்கிறது. பயணிகள் தங்கள் உடமைகளுடன் பயணிக்கத்தேவையில்லை என்றும், அவர்களது உடமைகளை பயணத்தின் ஆரம்பத்தில் பெற்றுக்கொண்டு, பயணத்தின் முடிவில் மீண்டும் பயணிகளிடமே ஒப்படைக்கும் நடைமுறையயும் அறிமுகப்படுத்த இருக்கிறது ஐஆர்சிடிசி. இந்த முறையானது ஜப்பானின் ஷின்கன்சென் ரயிலில் பின்பற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தனியார் மயமாக்கலுக்குப் பிறகு டெல்லி – லக்னோ மார்க்கத்திலும், அகமதாபாத் – மும்பை மார்க்கத்திலும் இரண்டு சேவைகளை கொடுக்கிறது ஐஆர்சிடிசி. எதிர்காலத்தில் இரயில்களை இயக்கப்போகும் தனியார் நிறுவனங்களுக்கு முன்மாதிரித் திட்டமாக இதை செயல்படுத்துகிறது இந்தியன் ரயில்வே.

இந்த ரயிலில் பயணிப்பவர்களுக்கு எந்தவித சலுகைகளும் வழங்கப்படமாட்டாது. அதோடு இதில் தட்கல் இடஒதுக்கீடும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!