சினிமா உலகை மாற்றும் டெக்னாலஜி! – சிவகார்த்திகேயன் அறிமுகம் செய்த ‘ஃபேன்லி’ ஆப் !

சினிமா உலகை மாற்றும் டெக்னாலஜி! – சிவகார்த்திகேயன் அறிமுகம் செய்த ‘ஃபேன்லி’ ஆப் !

சென்னை: பிரபல நட்சத்திரங்களை, அவர்களின் ரசிகர்களோடு இணைக்கும் தனித்துவமான பொழுதுபோக்கு செயலியான ஃபேன்லி (FANLY APP)-ஐ நடிகர் . சிவகார்த்திகேயன் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். பொழுதுபோக்குத் துறையில் நிலவும் டிஜிட்டல் குழப்பங்களுக்கு மாற்றாக, ஒரு பாதுகாப்பான, நேர்மறையான தொடர்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் இந்தத் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

I. சாதனையாளர்கள் தொடங்கி வைத்த புதிய சகாப்தம்

ஃபேன்லி என்டர்டெயின்மென்ட் தொடக்க விழா ஒரு நட்சத்திரக் கூட்டம் மட்டுமல்ல, பல்வேறு துறைகளின் சாதனையாளர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் இணைந்த ஒரு மேடையாக அமைந்தது.

விழாவில், பேட்மிண்டன் பயிற்சியாளர் பத்மஸ்ரீ  புல்லேலா கோபிசந்த், உலக செஸ் சாம்பியன் குகேஷ், காக்னிசண்ட் நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர்  லட்சுமி நாராயணன், ஊபெர் நிறுவனத்தின் மூத்த பொறியியல் இயக்குநர்  மணிகண்டன் தங்கரத்தினம், மற்றும் ஃபேன்லி செயலியின் இணை நிறுவனர்களான  சரவணன் கனகராஜு மற்றும்  ஸ்ரீனிவாசன் பாபு ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

II. ஃபேன்லி-இன் அஸ்திவாரம்: நேர்மறையும் பாதுகாப்பும்

ஃபேன்லி ஆப் என்பது இதுவரை இல்லாத அளவில் நட்சத்திரங்களை அவர்களின் ரசிகர்களோடு ஒருங்கிணைக்கும் தளமாகும். இன்றைய டிஜிட்டல் உலகம் போலிச் செய்திகள், போலி கணக்குகள் மற்றும் எதிர்மறைப் பரவல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் சூழலில், ஃபேன்லி அதற்கு ஒரு வலுவான மாற்றை வழங்குகிறது.

ஃபேன்லியின் முதன்மை நோக்கம், ஏமாற்றத்தை வழங்காமல், ரசிகர்கள் முழுக் கொண்டாட்டத்தையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் பாதுகாப்பான இடத்தைப் புகழ்பெற்ற நபர்களுக்கு வழங்குவதாகும். இதற்காக, ஃபேன்லியின் முதன்மை AI கருவியான செண்டி’மீட்டர் (senti’meter), ஆக்கபூர்வமான பின்னூட்டங்கள் மற்றும் விமர்சனங்களை மட்டுமே அனுமதிப்பதன் மூலம், ஒரு மரியாதைக்குரிய சமூகத்தை ஊக்குவிக்கிறது, அதே நேரத்தில் நேர்மறைச் செயல்பாடுகளுக்குப் பரிசுகளையும் வழங்குகிறது.

III. சிவகார்த்திகேயனின் நெகிழ்ச்சி உரை: “நெகட்டிவிட்டியைத் தவிர்க்கும் ஆப்”

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ஆப்பைத் துவக்கி வைத்த நடிகர் சிவகார்த்திகேயன், தனது உரையில் இந்தச் செயலியின் மைய நோக்கத்தைப் பாராட்டினார்.

  • ‘ஃபேமிலி’ போன்ற ‘ஃபேன்லி’: “Fanly என்பதை கேட்கும்போது ஃபேமிலி எனத்தான் கேட்கிறது. அவ்வளவு அழகான பெயரைத் தேடி வைத்திருப்பது அருமை,” என்று கூறிய அவர், ரசிகர்களிடம் நெகட்டிவிட்டியைத் தவிர்த்து பாஸிடிவான விஷயங்களைப் பரப்பும் இதன் நோக்கம் மிக அருமை என்றார்.

  • மூளை கம்மி: இந்த மேடையில் இருப்பவர்களை ஒப்பிடும்போது எனக்குத்தான் கொஞ்சம் மூளை கம்மி என நினைக்கிறேன். அதனால்தான் நடிக்க முடிகிறது. மூளை ரொம்ப ஜாஸ்தியா இருந்தா நான் இயக்குநர்களையெல்லாம் டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிருவேன்னு நினைக்கிறேன். அதனால அவங்க சொல்றத கேட்டு நடிக்கிற ஆளா இருக்கறதுக்கு கொஞ்சம் கம்மியா இருக்கிறதே நல்லதுதான் என்று வெள்ளத்தியாகச் சொன்னதைக் கேட்டு அரங்கங்கில் கரகோஷம்
  • ஆதரவு அல்ல, ரசனை: “என்னை வணங்கும் ஃபேன்ஸ் வேண்டாம், என்னை ரசிக்கும் ஃபேன்ஸ் தான் வேண்டும், ஏன்னா அவங்கள ஒரு ஃபேமிலியா பார்க்கிறேன்… என் ஃபேன்ஸ் டிஸ்ட்ராக்ட் ஆகிடக் கூடாது, வேற எதோ அவங்க மைண்டுக்குள்ள திணிச்சிடக் கூடாதுங்கிறத நான் மைண்ட்ல எப்பவும் வச்சிருப்பேன்.” என்று தான் எப்போதும் ரசிகர்களை சகோதரர்கள் (Brothers and Sisters) என்று அழைப்பதன் காரணத்தை விளக்கினார். இந்த ஆப் பாஸிடிவான விஷயங்களை மட்டுமே தேடித் தருவது அதே நோக்கத்தை பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

  • தனிப்பட்ட சவால்: “எனக்கு எல்லா சோஷியல் மீடியாவிலும் அக்கவுண்ட் இருக்கிறது, ஆனால் அதை வேறொருவர் தான் பார்த்துக் கொள்கிறார்கள். நான் இன்ஸ்டா பக்கம் போனால், ஸ்வைப் செய்தால் ஏதாவது ரீபோஸ்ட் ஆகி பிரச்சனை ஆகிவிடுகிறது. அதற்குப் பயந்து நான் எதையும் பயன்படுத்துவதில்லை,இன்னைக்கு வந்து சோசியல் மீடியால, நிறைய ஆப்ஸ்ல ட்ராக்ஷனுக்காக நெகட்டிவிட்டீஸ தான் புரமோட் பண்றாங்க. ட்ராக்ஷனுக்காகவே தான் இன்னைக்கு நிறைய ட்வீட்ஸ்லாம் வருது. என்னமோ ஒன்னு பொய்யாவாது சொல்லுவோம் அதுக்கு தான் நிறைய ட்ராக்ஷன் இருக்குன்னு… பட் எங்களுக்கு ட்ராக்ஷன் வேண்டாம் எங்களுக்கு இன்பர்மேஷன் ஆத்தென்டிக்கா இருக்கணும். பாசிட்டிவான என்கேஜ்மென்ட் இருக்கணும்னு நினைக்கிறது ஒரு சூப்பரான சிந்தனை”என் சொல்லி இன்றைய சோஷியல் மீடியா உலகில் பிரபலங்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெளிப்படுத்தினார். இந்த புதிய ஆப், நல்ல விஷயங்களை ஒருங்கிணைப்பதால், “இது நடந்தால் நான் மீண்டும் சோஷியல் மீடியா பக்கம் வரலாம்,” என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

  • ஆசை: எனக்கு இதுல அனிருத் வரணும்னு ரொம்ப ஆசை. அவருக்கு இது ரொம்ப பெர்ஃபெக்டா இருக்கும். உலகம் ஃபுல்லா ஒன்லி அனிருத்தோட மியூசிக் புடிச்சவங்க மட்டும் நிறைய பேர் இருக்காங்க. சோ, அனி ஃபேன்ஸ்க்குன்னு ஒரு தனியா ஒரு இடம் இருக்குன்னு கேட்கவே ரொம்ப நல்லா இருக்கு என்று தன் விருப்பத்தைத் தெரிவித்தார் .

IV. ரசிகர் மற்றும் பிரபல உறவின் புதிய பரிமாணம்

ஃபேன்லி தளத்தின் இணை நிறுவனர்கள், சினிமாவுக்கு சமூகத்தை உண்மையாக இணைக்கும் பிரத்யேக டிஜிட்டல் தளம் இல்லை என்ற வெற்றிடத்தை நிரப்ப இந்த ஆப்பை உருவாக்கியுள்ளதாகக் கூறினர்.

  • ஃபேன்லி மூலம், ரசிகர்கள் திரை நட்சத்திரங்களுடன் முன்னெப்போதும் இல்லாத அனுமதியைப் பெறுகின்றனர்.

  • நட்சத்திரங்கள் பிரத்யேக தகவல்களைப் பகிர்ந்து கொள்வார்கள், தனிப்பட்ட புதிய தகவல்களை அனுப்புவார்கள் மற்றும் தனிப்பட்ட ரசிகர் நிகழ்வுகளை நடத்துவார்கள்.

  • ரசிகர்கள் பிரத்யேக முழக்கங்களைப் பகிரவும், சிறப்புத் தயாரிப்புகளை வாங்கவும், ரசிகர் மன்றங்களுடனான தொடர்பைப் பெறவும் முடியும்.

ஃபேன்லி ஆப், பாரம்பரிய சமூக தளங்களின் கூச்சல்களுக்கு அப்பால், பிரபலங்களும் ரசிகர்களும் அர்த்தமுள்ள, கருத்துப் பரிமாற்றம் செய்யும் உறவுகளை உருவாக்கும் பாதுகாப்பான, தொகுக்கப்பட்ட இடமாக செயல்படும்.

கிளவுட் தொழில்நுட்பத்தில் செயல்படும் இந்த ஆப், பொழுதுபோக்கின் எதிர்காலத்திற்காக கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆப், நடிகர் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளபடி, பாஸிடிவிட்டி மற்றும் ரசனை சார்ந்த தொடர்புகளின் மையமாக விளங்கி பெரிய வெற்றி பெற ஆந்தை குழுமத்தின் வாழ்த்துக்கள்.

ஃபேன்லி ஆப்பைப் பதிவிறக்க:

Related Posts

error: Content is protected !!