திறக்கப் போறாங்கய்யா: டாஸ்மாக் திறக்க போறாங்க! – காரணம் என்னவாம் தெரியுமா?

திறக்கப் போறாங்கய்யா: டாஸ்மாக் திறக்க போறாங்க! – காரணம்  என்னவாம் தெரியுமா?

இந்த கொரோனா தாண்டவமாடும் சூழலிலாவது டாஸ்மாக் -கை முழுமையாக ஒழிக்க வேண்டும் என ஒரு மக்கள் கூட்டம் போராடி வரும் அதே வேளையில் மாநில அரசுகளின் திட்டங்கள் நிறை வேற்றுவதற்கும், அரசு ஊழியர்களின் சம்பளத்தைக் கொடுக்கவும் மதுபான விற்பனையை விட்டால் வேறு வருமாய் மார்க்கம் இல்லாமல் இருக்கிறது. இதன் காரணமாகவே மாநில அரசுகள் மதுபான விற்பனையைக் கைவிடாமல் தொடர்ந்து விற்பனை செய்து வருகிறது. ஆனால் நம் நாட்டில் கொரோனா தடுப்பிற்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 40 நாட்களில் மாநில அரசுகள் மதுபான விற்பனை தடையினால் மட்டும் சுமார் 27,000 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தை இழந்துள்ளது. இது மாநில அரசுக்குக் கடுமையான வருவாய் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 2019இல் மத்திய அரசு மதுபான விற்பனையில் விதிக்கப்படும் கலால் வரியின் மூலம் சுமார் 2.48 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வருவாய் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மே 3 வரையிலான லாக்டவுன் காலத்தில் சுமார் 27,178 கோடி ரூபாய் அளவிலான வருவாய் இழப்பை மாநில அரசு சந்தித்து விட்ட நிலையில் தமிழகத்தில் வரும் 7 ம் தேதி முதல் நிபந்தனையுடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து எடப்படி அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழகத்தில் வரும் 7 ம் தேதி முதல் டாஸ்மாக்கடைகள் திறக்கப்படும். அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். தமிழ்நாட்டை ஒட்டியுள்ள கர்நாடகம், ஆந்திரம் போன்ற அண்டை மாநிலங்களில் மதுபானக் கடைகளைத் திறக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு தமிழக எல்லைப் பகுதியில் உள்ள மக்கள் அதிக அளவில் செல்வதால், மாநிலங்களுக்கு இடையே யான மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இவற்றைக் கருத்தில்கொண்டு, தமிழ்நாட்டிலும் மதுபானக் கடைகளை வரும் 7.5.2020 முதல் திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா நோய் கட்டுப்பாடு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது .

மேலும் கீழ்க்கண்ட நிபந்தைகளுக்குட்பட்டு திறக்க அனுமதியளிக்கப்படுகிறது.

6 அடி தூரம் மதுபானக் கடைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்.

ஒரு நபருக்கும் இன்னொரு நபருக்கும் உள்ள இடைவெளி 6 அடி தூரமாக பராமரிக்கப்பட வேண்டும்.

மதுபானக் கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் கூடுவதற்கு அனுமதிக்கக் கூடாது.

மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுகிறது.

அனைத்து மதுபானக் கடைகளிலும் தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

ஒவ்வொரு மதுபானக் கடைகளிலும் தேவைக்கேற்ப கூடுதல் நபர்களை பணியமர்த்தி கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டும்.

Related Posts

error: Content is protected !!