‘ஆன்லைன் ரம்மி’ உள்ளிட்ட சூதாட்டத்துக்குத் தடை! : முதல்வர் பழனிசாமி உறுதி!

‘ஆன்லைன் ரம்மி’ உள்ளிட்ட சூதாட்டத்துக்குத் தடை! : முதல்வர் பழனிசாமி உறுதி!

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்கு தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பொதுமுடக்கத்தால் வேலைவாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருந்த பலரும் ஆன் லைனில் இருக்கும் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளில் பணத்தை கட்டி விளையாடினர். ஒரு கட்டத்தில் மனவேதனையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் தமிழகத்தில் நடைபெற்று வந்தது. முன்னதாக இந்த ஆன்லைன் கேம் குறித்து நம் பேஸ்புக் பக்கத்தில் வந்த ரிப்போர்ட்-டை படிக்க கீழ் காணும்  லிங்க்-கை க்ளிக் செய்து படிக்கலாம்

https://www.facebook.com/Aanthaiyaar/posts/164372478673851

அண்மையில் கூட அடுத்தடுத்து இறப்பு சம்பவங்கள் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட தடை செய்வது குறித்து அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அந்த வகையில் தற்போது தமிழக முதல்வரும் ஆன்லைன் ரம்மி தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், அனைத்து ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய அரசுக்கு கோரிக்கை வந்துகொண்டிருக்கின்றன. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபடுவது மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் முதல்வர் தெரிவித்தார்.

error: Content is protected !!