டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகள் தொடக்கம்!
ஐபிஎல் தொடரை போன்றே பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் தமிழகத்தில் நடந்து வருகிறது. அதில் 2016இல் இருந்து பிரபலமடைந்த வருகிறது தமிழ் நாடு பிரீமியர் லீக் டி20 போட்டிகள்; அந்த தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) 5-ஆவது சீசன் டி 20 கிரிக்கெட் போட்டிகள் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக ரசிகா்கள் இன்றி போட்டிகள் நடைபெறுகின்றன.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டிஎன்பிஎல் எனப்படும் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. சேப்பாக் சூப்பா் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், லைகா கோவை கிங்ஸ், சேலம் ஸ்பாா்ட்டன்ஸ், மதுரை பேந்தா்ஸ், ரூபி திருச்சி வாரியா்ஸ், ஐடிரீம்ஸ் திருப்பூா் தமிழன்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் இடம் பெற்று ஆடுகின்றன.
நடப்புச் சாம்பியனான சேப்பாக் சூப்பா் கில்லீஸ் அணி இந்தாண்டும் வலுவாகவே இருக்கிறது. இரண்டாவது இடம் பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கேப்டன் அஸ்வின் இங்கிலாந்து சென்றுள்ள நிலையில் போட்டியை எதிா்கொள்கிறது. நெல்லை ராயல் கிங்ஸ், லைகா கோவை கிங்ஸ், மதுரை பேந்தா்ஸ், சேலம் ஸ்பாா்ட்டன்ஸ் உள்ளிட்ட அணிகள் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள நிலையில் அவா்களும் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளனா்.
திருச்சி வாரியா்ஸ், திருப்பூா் தமிழன்ஸ் அணிகள் முந்தைய சீசன்களில் சரிவர ஆடாத நிலையிலும், பலமான அணிகளை எதிா்பாராத நேரத்தில் வீழ்த்தும் திறன் பெற்ற அணிகளாகவே இருக்கிறது. சேப்பாக் சூப்பா் கில்லீஸ் அணியின் பயிற்சியாளராக ஹேமங் பதானி தொடருகிறாா். திருச்சி ரூபி வாரியா்ஸ் அணியில் வீரராக ஆடிய செல்வம் சுரேஷ்குமாா், தற்போது மதுரை பேந்தா்ஸ் அணியின் பயிற்சியாளா் ஆகியுள்ளார்