தமிழக தபால் துறையில் ஓட்டுனர் பணி ரெடி!

தமிழக தபால் துறையில் ஓட்டுனர் பணி ரெடி!

த்திய தகவல் மற்றும் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தபால் துறை இயங்கி வருகிறது. இந்திய தபால்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தான் தபால் துறையின் தமிழ்நாடு சர்க்கிளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அந்த வகையில் மொத்தமாக 58 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2023

ஓட்டுனர் (Staff Car Driver)

காலியிடங்களின் எண்ணிக்கை – 58

பிரிவு வாரியாக காலியிடங்களின் விவரம்

சென்னை மண்டலம் – 6

மத்திய மண்டலம் – 9

தபால் வாகன சேவை – 25

தெற்கு மண்டலம் – 3

வடக்கு மண்டலம் – 15

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 19,900 – 63,200

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_28022023_MMS_TN_Eng.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

The Senior Manager (JAG),

Mail Motor Service,

No.37, Greams Road,

Chennai – 600006

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.03.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய ஆந்தை வேலைவாய்ப்பு என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Related Posts

CLOSE
CLOSE
error: Content is protected !!