தமிழக அரசு அதிகாரிகளை தாக்கிய பசு காவலர்கள்!

தமிழக அரசு அதிகாரிகளை தாக்கிய பசு காவலர்கள்!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரிலிருந்து தமிழகத்துக்கு பசுக்கள், கன்றுகளை ஏற்றி வந்த லாரிகளை சுமார் 50க்கும் மேற்பட்ட பசுப்பாதுகாவலர்கள் தாக்கினர். மேலும் கால்நடைக் கடத்தல் என்று சந்தேகித்து தேசிய நெடுஞ்சாலையை அடைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இறைச்சிக்காக மாடுகளை கொண்டு செல்லவில்லை என்றும், மாநில அரசின் என்.ஓ.சி சான்றிதழை காட்டிய பிறகும் கூட இந்துத்வா கும்பல் தொடர் தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதல் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனாலும் உடனடி நடவடிக்கை எதுவும் எடுக்காமல் காவல்துறையினர் மெத்தனமாக நடந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு கால்நடை வளர்ப்புத் துறை ராஜஸ்தானிலிருந்து 50 பசுமாடுகள் மற்றும் கன்றுக்குட்டிகளை வாங்கியிருந்தது. இதனை 5 லாரிகளில் ஏற்றிக் கொண்டு தமிழகம் நோக்கி புறப்பட்டது. இதற்குரிய என்.ஓ.சி. உள்ளிட்ட முறையான ஆவணங்கள் இருந்தும் பசுப்பாதுகாவலர்கள் தாக்கியுள்ளனர். இதனையடுத்து 4 பேர் கைது செய்யப்பட்டனர், இந்த விஷயத்தை பொறுப்புடன் அணுகாமல் கடமை தவறியதற்காக 8 போலீஸார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பார்மர் மாவட்ட எஸ்பி ககந்தீப் சிங்லா கூறும்போது, ‘அதிகாரிகளை இவர்கள் தாக்கியுள்ளனர். மேலும் லாரிக்கு தீவைக்கவும் முயற்சி செய்தனர். போலீஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தடுத்து நிறுத்தினர். அதிகாரிகள், லாரி ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் உள்ளூர் போலிஸ் நிலையத்துக்கு பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டனர். இதற்கிடையே பலர் கூடி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்” என்றார்.

மேலும் லாரி மீது கல்வீச்சுத் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. பசுக்களைக் காப்பாற்றி இப்போதைக்கு ஒரு இடத்தில் வைத்திருக்கிறோம். 50 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு உடனே தகவல் அளிக்கப்பட்டது, ஆனால் போலீஸ் அதிகாரிகள் தாமதமாக சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர், இதனால் ஒரு இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் காயம் அடைந்த அரசு அதிகாரிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் இன்னும் இரண்டு நாட்களில் தமிழகம் வந்தடைவார்கள் என்று தமிழக கால்நடைத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

Related Posts

error: Content is protected !!