சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா : ஏப்ரல் 1-ம் தேதி தொடக்கம்

சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா :  ஏப்ரல் 1-ம் தேதி தொடக்கம்

சிங்கப்பூரின் 4 அதிகாரபூர்வ மொழிகளில் தமிழும் ஒன்று. அந்த நாட்டில் தமிழ் செழித்தோங்க அரசு ஆதரவுடன் கடந்த 2000-ம் ஆண்டில் ‘வளர் தமிழ் இயக்கம்’ தொடங்கப்பட்டது. அவ்வமைப்பு சார்பில் கடந்த 2007 முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தமிழ் மொழி திருவிழா ஒரு மாதத்துக்கு நடத்தப்படுகிறது.

tamil mar 28

அதன்படி இந்த ஆண்டு தமிழ் மொழி திருவிழா வரும் 1-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சிங்கப்பூர் தொழில் துறை அமைச்சர் ஈஸ்வரன் விழாவைத் தொடங்கி வைக்கிறார்.

‘தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம்’ என்ற கருத்தை முன்வைத்து நடத்தப்படும் தமிழ் மொழி திருவிழாவில் தமிழகம், இலங்கை உட்பட உலகம் முழுவதும் இருந்தும் பல்வேறு தமிழ் அறிஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

விழாவில் 52 கலைநிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன. குறிப்பாக கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் ஏப்ரல் 28 முதல் 30-ம் தேதி வரை நாடகமாக அரங்கேற்றப்படுகிறது. மேலும் தமிழ் மொழித்திறன் போட்டி, கலந்துரையாடல், இசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இதுகுறித்து தமிழ் மொழி கவுன்சில் தலைவர் ராஜாராம் கூறியபோது, “தமிழ் மொழியைக் பாதுகாப்பது நமது கடமை. தமிழின் பெருமையை எதிர்கால சந்ததியினர் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதற்காகவே சிங்கப்பூரில் ஆண்டுதோறும் தமிழ் மொழி திருவிழாவை நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார்.

இந்த ஆண்டு தமிழ் மொழி திருவிழாவுக்கு 45 அமைப்புகளும் 4 பள்ளிகளும் நிதியுதவி அளித்துள்ளன.

error: Content is protected !!