தலிபான்கள் எல்லோருக்கும் புது அடையாள அட்டை, புது போஸ்போர்ட்!
ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்த தாலிபான்கள் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வரிசையில், ஆப்கானிஸ்தானில் புதிய பாஸ்போர்ட்டுகள் விநியோகிக்கப்படும் என தாலிபான் அரசு தெரிவித்துள்ளது.இதன்படி, ஆப்கானிஸ்தானில் அனைவருக்கும் புதிய பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படும் என்றும், அவற்றில் “ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்” என்ற பெயர் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய ஆப்கானிஸ்தான் அரசால் வழங்கப்பட்ட அடையாளர் அட்டைகளும், பாஸ்போர்ட்டுகளும் தற்காலிகமாக மட்டுமே செல்லுபடியாகும் எனவும், புதிய பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டை விநியோகிக்கப்பட்ட பின் அவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென தாலிபான் அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் தகவல் மற்றும் கலாசாரத் துறை துணை அமைச்சர் ஜபியுல்லா முஜாகித், ஆப்கன் பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டைகளில் ‘ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்’ என்ற பெயர் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.