குடித்து விட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தும் டிரைவருக்கு தூக்கு!

குடித்து விட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தும் டிரைவருக்கு தூக்கு!

உலகளவில் 240 கோடி பேர் மது அருந்தும் பழக்கம் உடையவராகவும், அதில் 90 கோடி பேர் பெண்கள் எனவும் ஒரு சர்வே தெரீவித்திருந்தது. உலகளவில் 1990 முதல் 2016-ம் ஆண்டு வரை ஆண்டுதோறும் சுமார் 28 லட்சம் பேர் ஆல்கஹால் அருந்துவதன் விளைவுகளால் ஏற்படும் உடல் பிரச்சனைகளால் உயிரிழந்து ள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  * 25 சதவிகிதத்துக்கும் அதிகமான டிரைவிங் சார்ந்த மரணங்கள் குடி காரணமாகவே ஏற்படுகிறது.* ரத்த ஆல்கஹால் செறிவு (BAC) அளவு அதிகமாக அதிகமாக விபத்து அபாய சதவிகிதமும் அதிகரிக்கிறது. 16 முதல் 25 மில்லிகிராம் ஆல்கஹால் செறிவு இருந்தாலே போதும்… காரை தலைகீழாகக் கவிழ்க்கும் அளவுக்கு, அந்த குடிகார டிரைவர் திறமை படைத்தவராக, தன்னை அறியாமலே மாறிவிடுகிறார். இதற்கு 4 மடங்கு சாத்தியக்கூறுகள் அதிகம்.* மூன்றில் ஒரு பங்கு விபத்து மரணங்களுக்கு போதை டிரைவர் மட்டுமல்ல…போதை பாதசாரியும் காரணமாக இருக்கிறார். குடித்துவிட்டு நடப்பது கூட குற்றம் என அறிவிக்க வேண்டிய சூழலை நோக்கி நாம் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இந் நிலையில் தாய்வான் நாட்டில் குடித்துவிட்டு டிரைவர் கார் ஓட்டும்போது விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார் எனில் காரோட்டிய அந்த டிரைவருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் விதத்தில் குற்றவியல் சட்ட விதிகள் திருத்தப்பட்டுள்ளன. தாய்வான் அமைச்சரவை இந்த திட்டங்களுக்கு வியாழனன்று அனுமதி வழங்கியது. முன்னதாக இந்த திருத்தத்துக்கு தாய்வான் நாடாளுமன்றமும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

தற்பொழுது டிரைவர் ஒருவர் குடித்துவிட்டு கார் ஓட்டும்போது விபத்து ஏற்பட்டு அந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தால் அந்த டிரைவருக்கு உயர்ந்த பட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க தற்போதைய சட்டம் வகை செய்கிறது. அமலில் உள்ள சட்டத் திருத்தத்தின்படி குடித்துவிட்டு கார் ஓட்டும் டிரைவர் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இரண்டாவது முறை குற்றம் அழைத்தால் அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்கிறது.

தற்போதைய விதிகள் குடித்துவிட்டு கார் ஓட்டும் டிரைவர் மிக குறைந்த தண்டனையே பெற வகை செய்கின்றன. அதனால் டிரைவர்கள் அந்த தண்டனைகளுக்கு அச்சப்படாமல் குடித்துவிட்டு கார் ஓட்டுவதும் அதனால் உயிரிழப்பு ஏற்படுவதும் சாதாரண நடவடிக்கைகளாக ஆகிவிட்டன. இதை நாம் அனுமதிக்க முடியாது என்று தைவான் நீதித்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

தாய்வான் நீதித்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஒரு விபத்தை உதாரணமாக சுட்டிக்காட்டியுள்ளது. வேன் ஒன்றினை ஓட்டி வந்த டிரைவர் குடித்திருந்தார். அவர் தனது வேனை டாக்ஸி ஒன்றின் மீது மோதினார். அந்த மோதல் காரணமாக டாக்சியில் இருந்த 3 பேர் உயிர் இழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். இத்தகைய விபத்தை ஏற்படுத்திய டிரைவருக்கு நாம் மிகக் குறைவான தண்டனை வழங்குவது எப்படி நியாயமாக அமையும்? என நீதித்துறை அமைச்சகம் கேள்வி எழுப்பியது.

இதனிடையே குடித்து விட்டு கார் ஓட்டும் டிரைவர்களுக்கு மிக குறைந்த நாடுகளே உயிரிழப்பு களுக்காக மரணதண்டனை வழங்குகின்றன. அமெரிக்காவில் அந்த டிரைவருக்கு மரண தண்டனை வழங்கும் நடைமுறை உள்ளது. இந்த நடைமுறைகளை பின்பற்றி குடித்துவிட்டு கார் ஓட்டி மற்ற உயிர்களைப் பறிக்கும் டிரைவர்களுக்கு மரணதண்டனை வழங்க சட்டம் திருத்தப்படுவதாக தாய்வான் நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!