Exclusive
அடித்து பேச வேண்டியதே காவல் சீர்திருத்தம்தான்!
சென்னை ஐகோர்ட் திருப்புவனம் அஜித் குமார் கொலை வழக்கை அடுத்த மாதம் 20ஆம் தேதிக்குள் விசாரித்து முடிக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை தமிழக காவல் துறையின் சீர்திருத்தத்தின் அவசியத்தை அழுத்தமாக உணர்த்த வேண்டியதுள்ளது. அஜித் குமாரை எந்த அதிகாரியும் நேரடியாக “அடித்துக் கொல்லுங்கள்” என்று உத்தரவிட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், சித்திரவதை செய்து, அடித்துக் கொல்லும் அளவுக்கு காவல்துறையினருக்குள் இந்த வன்மப் புத்தி எங்கிருந்து உருவானது என்ற கேள்விதான் நம் முன் நிற்கிறது. […]