Exclusive
ஒற்றைக் கோலில் உலக சாதனை: அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியனானது ஸ்பெயின்!
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கூடுதல் நேரத்தில் அடிக்கப்பட்ட ஒரே ஒரு கோல் ஸ்பெயினுக்கு உலக சாம்பியன் பட்டத்தை தேடித்தந்துள்ளது. வரலாற்றுப் பக்கத்தில் ஃபெர்ரான் டோரெஸ் போட்டியின் ஆரம்பம் முதலே ஸ்பெயின் அணி பந்தை தன் வசம் (65% Possession) […]