ஸ்விக்கி மூலம் இனி மளிகை, மருந்து & காய்கறி கூட டெலிவரி!

ஸ்விக்கி மூலம் இனி மளிகை, மருந்து & காய்கறி கூட டெலிவரி!

பல்வேறு ஓட்டல் மற்றும் உணவு விடுதிகளில் இருந்து தேவையான உணவு வகைகளை வாங்கி வீடுகளுக்கு கொண்டு வந்து வினியோகம் செய்வதில் பிரபலமானது ஸ்விக்கி நிறுவனம். இது இனி உணவு மட்டும் இல்லாமல் மளிகை பொருட்கள், மருந்துகள், காய்கறிகள் போன்றவற்றையும் அருகில் உள்ள கடைகளில் இருந்து வாங்கி வந்து வீட்டிற்கே டெலிவரி செய்ய உள்ளது. இதற்காக டெல்லியில் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் விற்பனைக் கடை ஒன்றையும் தொடங்கி உள்ளது.

ஸ்டார்ட்அப் சந்தையைப் பொறுத்தவரை நம் நாட்டில் வெற்றிகரமாக வர்த்தகம் செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஸ்விக்கி உணவு டெலிவிரி பிரிவில் சிறந்து விளங்குகிறது. இந்நிறுவனம் சென்னை, பெங்களூரு, ஹைதரபாத் ஆகிய நாட்டின் முன்னணி நகரங்களில் வர்த்தகம் செய்து வரும் நிலையில், தனது வர்த்தகத்தை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்லும் பணியில் இறங்கியுள்ளது.

இனி இந்த ஸ்விக்கி ஆப் மூலம் உங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மசாலா வகைகள் அழகு சாதனப் பொருட்கள் பான வகைகள், பழங்கள் காய்கறிகளை பெறலாம். இவற்றின் பட்டியலை சொன்னால் போதும் ஸ்விக்கி நிறுவன ஊழியர் அவற்றைக் கொண்டு வந்து உங்கள் வீட்டில் வழங்குவார்கள் இந்த தகவலை ஸ்விக்கி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீஹர்ஷ மஜெட்டி இந்த தகவலை வெளியிட்டார். ஸ்விக்கி நிறுவனம் இந்தியாவில் 2014ஆம் ஆண்டு காலடி எடுத்து வைத்த்து, இப்பொழுது பொதுமக்களுக்கு உணவு வகைகளை வினியோகம் செய்து வருகிறது.

60,000 உணவு நிறுவனங்களிடமிருந்து தேவையான உணவு வகைகளை ஸ்விக்கி நிறுவனத்தின் ஊழியர்கள் கொள்முதல் செய்து வழங்குகிறார்கள் . இந்தியாவில் உள்ள 80 நகரங்களில் ஸ்விக்கி நிறுவனம் தற்போது இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!