சீமான் பொய் பேசுகிறார்., சீமான் கதை விடுகிறார். சரிப்பா,- சுரேஷ் காமாட்சி காட்டம்!

சீமான் பொய் பேசுகிறார்., சீமான் கதை விடுகிறார். சரிப்பா,- சுரேஷ் காமாட்சி காட்டம்!

தமிழ் தேசிய அரசியலை முன்னெடுப்பது அவ்வளவு சாதாரணமல்ல. மிகப்பெரும் ரணத்தைக் கடந்துதான் வரவேண்டும். தமிழ்தேசியம் பேசினால், எல்லாக்கூட்டமும் ஒன்று சேர்ந்துதான் எதிர்க்கும். அதைத் தாண்டி தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பது சாதாரணமல்ல.  இவர்களுக்கு அண்ணன் சீமான் பேசும் அரசியலைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தங்களின் அரசியல் கோட்டை சிதைந்து விடுமோ என்ற பயம். மக்கள் தங்களுக்கான உண்மையான அரசியல் எது எனக் கண்டு பிடித்து விடுவார்களோ என்ற பயம்.

அதனால் அவன் பேசும் அரசியலை பகிடியாக்கத் துடிக்கின்றனர். அரசியல் விவாதங்களுக்கு நேர் நின்று பேசத் தகுதியற்ற லஞ்ச லாவண்யத்தில் ஊறிப்போன கட்சிகளும், அதன் தலைவர்களும் பதறிப்போய் மடைமாற்று வேலைகளை வேகமாக முன்னெடுக்கின்றனர்.

நேர்நின்று போர்புரியத் தகுதியற்ற கோழைகள் முதுகில் குத்துகின்றன. இட்லியைப் பற்றி, உணவருந்தியதைப் பற்றி கிண்டலைப் பரப்பிக் குளிர்காய்கின்றன.

இதைக் கிண்டல் செய்யும் பலர் ஊழல் பெருச்சாளிகளின் கூவலுக்குப் பின் நின்று கொண்டிருப்பது தான் நகைப்பு.

சீமான் பொய் பேசுகிறார். சரிப்பா.. பொய்தான் பேசுகிறார். சீமான் கதைவிடுகிறார். சரிப்பா, கதைதான் விடுகிறார்.

அப்படியே வைத்துக்கொள்வோம். இதனால் உனக்கு என்ன இழப்பு? இட்லியிலும் ஆமைக் கறியிலும் உனக்கு என்ன இழப்பு? உன் சோத்துல மண்ணா விழுந்தது??

அட சாமிகளா… அரைநூற்றாண்டாக உன் மொழியைக் காணவில்லை. உன் உழைப்பைக் காண வில்லை. உன் இனத்தால் உன்னை ஆள முடியவில்லை. கோடிகோடியாய் கொள்ளையடித்து விட்டார்கள். உன் வளத்தைக் காணவில்லை. அதைக் கேட்க துப்பில்லை.

அதையெல்லாம் யார் செய்தது? அவர்களைக் கேள்வி கேட்டாயா? அவர்களைக் கேலி செய்தாயா? பொய்யர்கள் என்றாயா? திருடர்கள் என்றாயா? கொள்ளையடித்த பணத்தை எங்கே எனக் கேட்டாயா?

உன் பேச்சு மொழி… எழுத்து மொழி… உன் உணர்வுகள் யாவும், அடிமைப்பட்டு பல ஆண்டுகாலம் கிடக்கே அதைப் பற்றிக் கவலைப்பட்டாயா??

இதையெல்லாம் விட்டுவிட்டு உனக்கு இட்லிதான் முக்கியமா?

அண்ணன் சீமான் பேசும் அரசியலைப் பார்.

கொண்டிருக்கும் கனவுகளைப் பார். ஆடு மாடு தொழிலைப் பற்றிக் கிண்டலடித்தவன் தற்சார்பு பொருளாதாரக் கொள்கையைக் கிண்டலடித்தவனெல்லாம் இன்னைக்கு மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக்கொண்டு விவசாயத்தை நோக்கியும், ஆடுமாடு மேய்க்கவும் ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறான்.

அதைப்போலத்தான் அவனைப் பற்றி நீங்கள் கிண்டல் பேசப் பேச அவனெடுக்கும் அரசியலே சரியென்று முன் நிற்கும்.

திராணியிருந்தால்… அவன் பேசும் அரசியலைப் பேசுங்கள். தைரியமிருந்தால் சூட்கேஸ் வாங்காத ஒரு அரசியல்வாதி வந்து அவன் முன் நின்று பேசட்டும்.

கோடி கோடியாய்க் கொள்ளையெடுத்து… பல்லிளித்து பெட்டி வாங்கிக் கொண்டு இன்றைக்கு ஒரு கூட்டணி நாளைக்கு ஒரு கூட்டணி எனத் தாவிக்கொண்டிருக்கும் பசலைவாதிகளைத் தாங்கிப் பிடிக்கும் நீங்களெல்லாம் ஒரே கொள்கை ஒரே நோக்கத்தில் நிற்கும் சீமானைப் பற்றி கிண்டல் செய்ய அருகதையற்றவர்கள்.

இன்னும் நிறைய கதைகள் சொல்லட்டும். இன்னும் நிறைய பொய்கள்கூட சொல்லட்டும் சீமான் அண்ணன். ஆனால் அவனின் உண்மை உங்களுக்குப் பொய்யெனத் தெரிந்தால் அதற்கு நீங்கள் செய்யும் அரசியல் பின்புலம்தான் காரணம். இட்லியில் கறி வைத்து நீங்கள் சமைத்ததே இல்லையா?? இல்லை அப்படியொன்று இந்த உலகத்திலேயே இல்லையா? ஏதோ ஒரு முட்டாப் பய அதைக் காமெடியாக்கினா நாமும் மந்தை மாதிரி பின்னாடியே பேசுவோமா?? சினை இட்லின்னு கேள்விப்பட்டிருக்கீங்களா?? தமிழ்நாட்டுலதான் இருக்கு. அதைச் செய்யும்போது கறி இட்லி செய்ய முடியாதா?? இதோ ஆன் லைனில் இருப்பதைப் பாருங்க.

அண்ணன் தலைவர் மேதகு பிரபாகரனாரைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும். இன்னும் சொல்லிச் சொல்லி அவரைப் பதிய வைக்கட்டும் இப்பிள்ளைகள் மனதில். அவரைப் பற்றி பேசிக் கொண்டே இருக்கட்டும். ஏனெனில் தமிழினத் தலைவராக அவரை நாம் ஏற்றுக் கொண்டிருப்பதை உடைத்தால்தான் இன்னும் சிலரை அந்த இடத்தில் வைக்க முடியும் என்பதற்காக சிலர் தந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நம் தமிழ்ப் பிள்ளைகள் இன்னும் அதிகமாக தலைவர் பிரபாகரனைப் பற்றிப் பேச வேண்டும். ஒவ்வொருவர் மனதிலும் நம் இனத் தலைவனை, அவரது புகழைப்
பதிய வைத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

எதை உடைக்க நினைக்கிறார்களோ அதை வலுவாக்க உழைக்க வேண்டும்.

உண்மையும் நேர்மையும் அற்றவர்கள், அண்ணனைப் பற்றிப் பகடி செய்ய காரணம் தேடி.. சின்னப் பிள்ளை விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு அவர்கள் காசுகொடுத்து வேலைக்கு வைத்திருக்கும் ஊடக வாசிகள் மற்றும் ஊடகம் என்ற பெயரில் வைத்திருக்கும் கட்சி ஒலிபெருக்கிகள் துணைபோகும்.

அதையெல்லாம் கடந்துதான் நம் தமிழ்தேசியத்தை கட்டமைக்க முடியும்.

தம்பிகளே.. அண்ணன்களே இந்தக் கிண்டல்களைக் கேலிகளைப் புறந்தள்ளி நம் அரசியலை முன்னெடுங்கள்.

இந்தக் கிள்ளுக் கீரைகள் நரி விடும் குசுவை மோந்துகொண்டே நிற்கட்டும். நாம் ஓடுவோம் பேரிலக்கை நோக்கி…

சுரேஷ் காமாட்சி

தயாரிப்பாளர்/ இயக்குநர்

Related Posts

error: Content is protected !!