சேகர் ரெட்டி மீது அமலாக்கத்துறைப் பதிவு செய்த வழக்குத் தள்ளுபடி!- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

ர்ச்சைகளுக்கு பேர் போன தொழிலதிபர் சேகர் ரெட்டி மீது அமலாக்கத்துறைப் பதிவு செய்த வழக்கைத் தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016- ஆம் ஆண்டு தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனையை நடத்தியது. இந்த சோதனையின் போது, 147 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 34 கோடி ரூபாய்க்கு புதிய இரண்டாயிரம் ரூபாய் தாள்களும், 178 கிலோ தங்கமும் சிக்கியது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், சேகர் ரெட்டியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே, சென்னை ஐகோர்ட் அமலாக்கத்துறையின் விசாரணையைத் தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதி வழங்கியிருந்தது. இதனை எதிர்த்து தொழிலதிபர் சேகர் ரெட்டி சார்பில், சுப்ரீம் கோர்ட்டி மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கு தொடர்பான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்நிலையில், இவ்வழக்கு இன்று (05/05/2022) விசாரணைக்கு வந்த போது, விசாரித்த நீதிபதிகள், தொழிலதிபர் சேகர் ரெட்டி மீதான அமலாக்கத்துறையின் வழக்கு விசாரணைக்கு தடை விதிப்பதாகவும், அவர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்துச் செய்யவதாகவும் கூறி, அமலாக்கத்துறையின் மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளனர்.

முன்னதாக, சி.பி.ஐ. இந்த விவகாரத்தில் சேகர் ரெட்டிக்கு எதிரான எந்தவிதமான ஆதாரமும் இல்லையென கூறி வழக்கை முடித்து வைத்திருந்து. இதன் அடிப்படையில், அமலாக்கத்துறையின் வழக்கையும் ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும் சேகர் ரெட்டி தரப்பில் வாதிடப்பட்டது. இதனையேற்ற நீதிபதி இவ்வாறு தீர்ப்பளித்துள்ளனர்.

aanthai

Recent Posts

பெண்களின் உடல் – ஆபாசம் வேறு : நிர்வாணம் வேறு= கேரளா ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!

தற்போதய சூழல்களில் ஆடைகள், நிர்வாணம் மற்றும் ஆபாசம் குறித்த பல சர்ச்சைக்குரிய கருத்துகள் வந்தவண்ணம் உள்ளன. அதாவது, பெண்கள் ஆடை…

8 hours ago

2024 வெறும் நாடாளுமன்றத் தேர்தலை மட்டும் குறிக்கவில்லை.

இந்திய வரலாற்றில் 1947-ஐ விட 2024 மிக மிக முக்கியமானது. இந்தியாவின் தேசியப் பாதுகாப்பை, இறையாண்மையை, ஒருமைப்பாட்டை, சமூக அமைதியை,…

10 hours ago

டி 20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்துக்கு மாற்றமா?

விளையாட்டு ரசிகர்களின் திருவிழாவான 2024 டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுககளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஐசிசி…

11 hours ago

‘ரெஜினா’ பட டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ் !

யெல்லோ பியர் புரொடக்சன் (Yellow Bear Production) சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெஜினா’. நடிகை சுனைனா…

18 hours ago

தன் மீதான கத்திகுத்து தாக்குதல் சம்பவம் பற்றி புத்தகம்- சல்மான் ருஷ்டி தகவல்!

பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி 1988-ம் ஆண்டு எழுதிய தி சாத்தானிக் வெர்சஸ் என்ற புத்தகம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால்…

1 day ago

நாட்டின் முதன்மை கல்லூரிகள் தரவரிசை – மத்திய அரசு அறிவிப்பு!

என்ஐஆர்எஃப் எனப்படும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் சார்பில் நம் நாட்டிலுள்ள நிறுவனங்கள், பல்கலைக்கழகம், கல்லூரிகள், பொறியியல், மேலாண்மை, மருந்தகம்,…

1 day ago

This website uses cookies.