சுப்ரீம் கோர்ட்-டில் காணொலி மூலமே விசாரணை தொடருமாம்!

சுப்ரீம் கோர்ட்-டில் காணொலி மூலமே விசாரணை தொடருமாம்!

ந்தியாவெங்கும் கொரோனாவின் இரண்டாவது அலை அதிரடியாக தாக்கி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதாக பல மாநிலங்களில் புகார் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் ஊழியர்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

நம் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 1,68,912 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் 904 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 10,774 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உலகளவில் கொரோனா பரவலில் இந்தியா முதலிடம் பிடித்திருக்கிறது.

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் ஊழியர்கள் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், சுப்ரீம் கோர்ட் வளாகம், அறைகள் முழுவதுமே கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பல நீதிபதிகளும் இனி முன்புபோல் காணொலியில் விசாரணையை வீட்டிலிருந்தே நடத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே வேளையில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறவிருந்த விசாரணை 11.30 மணிக்கும், 11 மணிக்கு நடைபெறவிருந்த விசாரணை 12 மணிக்கும் மாற்றிவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!