முத்தலாக் முறைக்கு ஆறு மாதம் இடைக்காலத் தடை!

முத்தலாக் முறைக்கு ஆறு மாதம் இடைக்காலத் தடை!

மூன்று முறை ‘தலாக்’ சொல்லி மனைவியை விவாகரத்து செய்யும் வழக்கம் நம் இந்திய,  அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று அறிவிக்கக்கோரி, 5 முஸ்லிம் பெண்கள் உள்பட 7 பேர் தனித்தனியாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் அமர்வு முத்தலாக் முறைக்கு 6 மாதம் இடைக்கால தடைவிதித்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக முத்தலாக் சொல்லி, தங்கள் மனைவியை விவாகரத்து செய்யும் வழக்கம், முஸ்லிம்களிடையே நிலவி வருகிறது. இது, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று அறிவிக்கக்கோரி, 5 முஸ்லிம் பெண்கள் உள்பட 7 பேர் தனித்தனியாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு விசாரித்தது. விசாரணையின்போது, ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்து கொள்வது பற்றி நாங்கள் விசாரிக்கப் போவதில்லை என்றும், ‘முத்தலாக்’ வழக்கம் முஸ்லிம்களின் அடிப்படை உரிமையா? என்பது பற்றி மட்டுமே தீர்ப்பு அளிப்போம் என்றும் நீதிபதிகள் கூறி இருந்தனர்.

கடந்த மே 18–ந் தேதி விசாரணை முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் 5 நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு அளித்தது.

அதன் விவரம் இதோ-

இஸ்லாமியருக்கு பிரச்சினை இல்லாத வகையில் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும்.

சட்டம் இயற்றும் வரை, ஒரே சமயத்தில் தொடர்ச்சியாக முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறைக்கு மட்டும் தடை.

முத்தலாக் முறையில் தலையிடப் போவதில்லை..முத்தலாக் விவகாரத்தில் நாடாளுமன்றம் முடிவெடுத்துக் கொள்ளலாம்.

சட்டம் ஆறு மாதங்களில் நடைமுறைக்கு வரவில்லை என்றால், முத்தலாக்கில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு தொடரும்.

ஷரியா சட்டம், இஸ்லாமிய அமைப்புகளின் கருத்துக்களை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

Related Posts

error: Content is protected !!