ஒடிசா : பூரி ஜெகன்நாதர் ஆலயத்தின் ரத யாத்திரைக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி!

ஒடிசா மாநிலத்தில் சர்வதேச பிரசித்தி பெற்ற பூரி ஜெகநாதர் ஆலயம் தேரோட்டத்தை நிபந்தனைகளுடன் நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதியளித்துள்ளது.
ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோயிலில் ஆண்டுதோறும் தேரோட்டத் திருவிழா 10 முதல் நாட்கள் 12 வரை வெகு சிறப்பாக நடைபெறும். உலகில் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்காக பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்துவர். இந்த ஆண்டுக்கான தேர் திருவிழா ஜூன் 24ம் தேதி தொடங்கப்படும். ஆனால் தற்போது நிலவி வரும் கொரோனா நெருக்கடி கால கட்டத்தில் பூரி தேர் திருவிழா நடத்துவதில் சிக்கல் எழுந்தது. அதிகப்படியான பக்தர்கள் ஒன்று கூடுவார்கள் என்பதால் தேரோட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து. பூரி ஜெகநாதர் தேரோட்டத்திற்கு அனுமதியளித்தால், அந்த கடவுளே மன்னிக்கமாட்டர் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது.
இச் சூழலில், பூரி தேரோட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை திருத்தம் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாப்டே அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பல நூற்றாண்டுகளாக நடைபெறும் பூரி ஜெகநாதர் தேரோட்டத்துக்கு தடை விதிக்கக் கூடாது எனவும், பக்தர்கள் கூட்டமின்றி நடத்தவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒடிசா அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
பக்தர்களின் பாதுகாப்பிற்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு முறையான வழிகாட்டுதல்களை பின்பற்றியே தேரோட்டம் நடத்தப்படும் என்றும், சுகாதார விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு, அனைவரும் பரிசோதனை செய்யப்படுவர்கள் எனவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை அடுத்து, கேள்வியேழுப்பிய நீதிபதிகள், பொது மக்களின் நலனில் எந்தவித சமரசமும் செய்து கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். தொடர்ந்து , தேரோட்டத்தை நடத்துவது தொடர்பாக அனுமதி வழங்க வேண்டும் என்றும், அதனால் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்தால் ஒடிசா மாநில அரசு பொறுப்பேற்கும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் ஒடிசா அரசு தெரிவித்தது. பின்னர், இந்த பூரி தேரோட்டத்தை நடத்துவது யார் என்றும், பொறுப்பாள ர்கள் குறித்தும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அதிகப்படியான மக்கள் திரள்வதால் கொரோனா பரவல் அதிகரித்து மோசமான விளைகளுக்கு வழிவகுக்கும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
இதையடுத்து, பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக அனைத்து ஏற்பாடுகளை சரியான முறையில் செய்து தரப்படும் என்றும், மத்திய அரசுடன் இணைந்து செயலாற்றும் என்றும் ஒடிசா மாநில அரசு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து உரிய விதிமுறைகளுடனும், பக்தர்கள் இன்றியும் பூரி ஜெகநாதர் கோயில் தேரோட்டம் நடத்த சுப்ரீம் கோர்ட்டும் அனுமதி அளித்தது.