சூடானில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் மீண்டும் ஆட்சியில் அமர்த்தப்பட்டார்!

மக்களின் பலத்த எதிர்ப்பை அடுத்து சூடான் இராணுவத்தினால் சிறைப்பிடிக்கப்பட்டு பதவியில் இருந்து இறக்கப்பட்ட பிரதமர் ஹம்டோக் வீட்டுச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் பிரதமராக பதவியில் அமர்த்தப்பட்டார்.
வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது சூடான். அங்கு 2019 ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் மற்றும் ராணுவம் கலந்த கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அந்த ஆட்சியில் அப்துல்லா ஹம்டோ சூடான் பிரதமராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் சூடானில் ராணுவப் புரட்சி நடந்தது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஹம்டோக் கைது செய்யப்பட்டார். ஆனால் ராணுவத்திடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பதாக எழுதி கையெழுத்து போட ஹம்டோக் மறுத்துவிட்டார். உடனே ராணுவ புரட்சிக்கு எதிராக சூடான் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி சூடான் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது அதற்குப் பிறகு இதுவரை சூடான் நாட்டு இளைஞர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர்.
இதை அடுத்து அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் சபையும் ராணுவ தலைவர்களுடன் மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசை ஆட்சியில் அமர்த்தும் வழி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்நாட்டு ராணுவம், அரசியல் தலைவர்களின் பிரதிநிதிகள் குழு மற்றும் முன்னாள் கிளர்ச்சி குழுக்களுக்கு இடையில் நேற்று முன்தினம் இரவு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இதை தொடர்ந்து, பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் அப்தல்லா ஹம்டோக்கை மீண்டும் பதவியில் அமர்த்த சூடான் ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.
சூடான் மக்கள் மேலும் ரத்தம் சிந்துவதைத் தவிர்க்கும் வகையில் பிரதமர் அப்தல்லா ஹம்டோக் ராணுவத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதாகவும், எனவே அவரை மீண்டும் பதவியில் அமர்த்த ராணுவம் சம்மதித்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் சூடானில் நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வரவுள்ளது.