இரண்டு வயது குழந்தைக்கு முதுகெலும்பு அறுவை சிகிச்சை-சாதித்த காவேரி மருத்துவமனை!

இரண்டு வயது குழந்தைக்கு முதுகெலும்பு அறுவை சிகிச்சை-சாதித்த காவேரி மருத்துவமனை!

2-வயது குழந்தைக்கு சிக்கலான முதுகுத்தண்டு வளைவு திருத்தல் அறுவை சிகிச்சை ரேடியல் ரோட்டில் உள்ள காவேரி மருத்துவமனையின் நரம்பியல் மற்றும் முதுகுத்தண்டு மருத்துவ நிபுணர்களால் வெற்றிகரமாக செய்யப்பட்டது.

வங்காளதேசத்தைச் சேர்ந்த பிறப்பிலேயே முதுகுத்தண்டு வளைந்த 2-வயது குழந்தைக்கு நாட்கள் செல்லச் செல்ல முதுகுத்தண்டின் சிதைவு அதிகரித்துக்கொண்டே போனது. குறிப்பாக, சிறிது நேரம் விளையாடிய பிறகு குழந்தையின் கால்களில் பலவீனம் ஏற்பட தொடங்கியது. ஆறு மாத வயதில் குழந்தையின் முதுகுத்தண்டை காசநோய் பாதித்தது. அக்குழந்தை ரேடியல் ரோட்டில் உள்ள  காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற அழைத்து வரப்பட்டது.குழந்தையை பரிசோதித்த பின், காவேரி இன்ஸ்டிடியூட் ஆப் பிரைன் அண்ட் ஸ்பைன் (KIBS)-இன் இயக்குனர் மற்றும் மூத்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் கிருஷ் ஸ்ரீதர், மற்றும் அவரது மருத்துவ குழு, மிகவும் உருக்குலைந்த வளைவு (கைபோசிஸ்) மற்றும் மேல் தொராசிக் பகுதியில் முதுகுத்தண்டின் கிட்டத்தட்டச் சரிவின் காரணமாக அது அழுத்தத்திற்கு உள்ளானது தான் இந்த நிலைக்குக் காரணம் என்று கண்டறிந்தனர். சிறப்பான சிகிச்சை முறையாக சிதைந்து போன முதுகுத்தண்டிற்கான திருத்தல் அறுவை சிகிச்சை அக்குழந்தைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

மருத்துவர் கிருஷ் ஸ்ரீதரின் முன்னிலையில், நான்கு அறுவை சிகிச்சையாளர்கள் கொண்ட குழுவால் குழந்தையின் மார்பு சுவர் வழியாக காம்ப்லெக்ஸ் ஸ்பைனல் ப்ரோசீஜர் செய்யப்பட்டது. முதுகுத்தண்டின் கிட்டத்தட்டச் சரிந்த பாகம்  நீக்கப்பட்டது மற்றும் வளைவு குறைக்கப்பட்ட பின் முதுகுத்தண்டு சீராக்கப்பட்டது. இந்த எட்டு-மணி-நேர அறுவை சிகிச்சை தொடர்ந்த நரம்பியல் கண்காணிப்பின் (neuro-monitoring) கீழ் செய்யப்பட்டது.

“குழந்தைகளுக்கான முக்கிய அறுவை சிகிச்சைகள் வயதில் மூத்தவருக்கானதை ஒப்பிடுகையில் கடினமானது”, என்று மருத்துவர் கிருஷ் ஸ்ரீதர் அவர்கள் தெரிவித்தார். “இதுபோன்ற காம்ப்லெக்ஸ் ஸ்பைனல் ப்ரோசீஜர்களை செய்யும் குழுவிற்கு அனுபவத்துடன் சேர்த்து  குழந்தையின் வளர்ச்சி சம்பந்தமான படிநிலைகளைப் பற்றிய முழுமையான புரிதல் தேவை”, என்று குறிப்பிட்டார்.

“முதுகுத்தண்டு அறுவை சிகிச்சையை எண்ணி யாவரும் இனி அச்சம் கொள்ள தேவையில்லை. மயக்கவியல், கண்காணிப்பு, முதுகுத்தண்டு உள்வைப்புகள், மற்றும் அதிவேக துளைக்கும் கருவி, அறுவை சிகிச்சை நுண்ணோக்கி போன்றவற்றை யாவிலும் உள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்கள், துல்லிய அறுவை சிகிச்சைக்கு, குறிப்பாக காம்ப்லெக்ஸ் ப்ரோசீஜர்களுக்கு, நேர்மறையான வெளிப்பாடுகளை அளித்துள்ளது”, என்று மருத்துவர் கிருஷ் ஸ்ரீதர் தெரிவித்தார்.

ஒருவார காலம் அந்த குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு பூரண குணமடைந்த பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அக்குழந்தை மீண்டும் சுற்றி ஓடவும் விளையாடவும் தொடங்கிவிட்டது. இதுபோன்ற  சிக்கலான முதுகுத்தண்டு உருக்குலைவு திருத்தல் அறுவை சிகிச்சையை மேற்கொண்டதை   எண்ணி குழந்தையின் பெற்றோர்களும் உறவினர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னை ரேடியல் ரோட்டிலுள்ள காவேரி மருத்துவமனை, ஒரு முன்னணி மருத்துவமனையாகும். நரம்பியல், இருதயவியல், இரைப்பை குடல், பெண்கள் மற்றும் குழந்தை நலம், எலும்பியல், மூட்டு புனரமைப்பு, சிறுநீரகவியல் முதலிய சிறப்புப் பிரிவுகளில், மேம்பட்ட மருத்துவமும், அறுவை சிகிச்சை வசதியும் வழங்குகின்றது. பிரத்தியேக நிபுணர்கள் குழு, 50+ கிரிட்டிக்கல் கேர் படுக்கைகள், 20+ NICU படுக்கைகள், 7+ஆபரேஷன் தியேட்டர்கள், மேம்பட்ட கேத் லேப்கள், 3T MRI மற்றும் 4K + 3D நரம்பியல் நுண்ணோக்கி, உறுப்பு மாற்று சிகிச்சை வசதிகள், 24/7 டயாலிசிஸ் பிரிவு போன்ற அதிநவீன வசதிகள் மூலம் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவையை, உலகம் முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு வழங்குகின்றது.

error: Content is protected !!