இன்றைக்கும் உலகின் பல நாடுகளில் மகாராஜாக்களும் மகாராணிகளுமே ஆட்சி செய்கிறார்கள். ஐ.நா. சபையில் உறுப்பினராக இருக்கும் 191 நாடுகளில் 28 நாடுகள் இன்னமும் மன்னராட்சியில்தான் உள்ளன. சில நாடுகளில் மன்னர் பதவியும் அதையொட்டிய ஆடம்பரங்கள் மட்டுமே இருக்கின்றன. அதிகாரமெல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே இருக்கிறது.
அந்த வகையில்தான் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் முடியாட்சி குடியரசு அமலில் இருந்து வருகிறது. இங்கு மக்கள் தேர்வு செய்யும் அரசு ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், மன்னர் குடும்பத்திற்கு பாரம்பரிய முறைப்படி மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நாட்டின் அரசராக 6வது பிலிப்பி இருந்து வருகிறார். ராணியாக லெட்டிசியா உள்ளார். இவர்களுக்கு கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி இளவரசி லியோனார் பிறந்தார். இவரது முழு பெயர் லியோனார் டி தோடாஸ் லாஸ் சாண்டோஸ் டி போர்பான் ஒய் ஆர்ட்டிஸ் என்பதாகும். அந்நாட்டு மன்னர் குடும்ப முறைப்படி 18 வயது பூர்த்தி ஆகும் போது இளவரசன் அல்லது இளவரசி நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் படி பொறுப்பேற்றுக்கொள்வது வழக்கம்.
அந்த வகையில் தனது 18வது வயதை பூர்த்தி செய்த இளவரசி லியோனார் அதிகாரபூர்வமாக இளவரசியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் மூலம் அவர் வருங்கால ராணியாக பொறுப்பேற்க உள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக இதற்காக ராணுவ பயிற்சி மேற்கொண்டு வந்த லியோனார் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகாரபூர்வமாக பட்டத்து இளவரசியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவரது தந்தை 6வது பிலிப்பி கடந்த 37 ஆண்டுகளாக மன்னராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. புதிய பட்டத்து இளவரசியாக லியோனார் பொறுப்பேற்று கொண்டுள்ளதை அடுத்து, ஸ்பெயின் நாட்டில் பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாட்டங்களில் குதூகலித்துக் கொண்டிருக்கிறார்கள்
ரெப்போ விகிதம் முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்…
பல பெண்களுக்கு, மாதவிடாய் சுழற்சியானது வலிமிகுந்த பிடிப்புகளுடன் சேர்ந்து, அன்றாட செயல்பாடுகளை மட்டும் பாதிக்காமல்,தாங்குவது மிகவும் கடினமாக இருக்கும். அத்தகைய…
மிக்ஜாம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு முதல்வர் மு..ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்தை…
SRK இந்த ஆண்டில் மீண்டுமொருமுறை சாதனை நிகழ்த்தியுள்ளார்! டங்கி டிராப் 4 (டிரெய்லர்) வெளியான வேகத்தில் பெரும் சாதனை படைத்து…
அண்மையில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் மத்திய அமைச்சர்களான நரேந்திர சிங் தோமர், ப்ரஹலாத்…
ரஷ்ய அதிபராக புடின் உள்ளார். அவரது பதவிக்காலம் முடிவடைவதை முன்னிட்டு அங்கு மார்ச் 17ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று…
This website uses cookies.