‘சொப்பன சுந்தரி’ – விமர்சனம்!

‘சொப்பன சுந்தரி’ – விமர்சனம்!

டுத்தவர்களின் பொருளுக்கு ஆசைப்பட்டால் என்ன நடக்கும் என்பதை காமெடி கலந்த திரைக்கதையில் கொடுக்க முயற்சி செய்து அதில் வெற்றி பெற போராடி உள்ளார் டைரக்டர் எஸ்.ஜி சார்லஸ் . அதுவும் பல சீன்கள் எரிச்சலூட்டுகின்றன. வசனம் எழுதுவதில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். ஜஸ்ட் லைக் தட் ஹிட் ஆன ‘இந்த கார வெச்சிருந்த சொப்பன சுந்தரிய இப்போ யாரு வெச்சிருக்கா…’ என்ற கவுண்டமணி-செந்திலின் காமெடி வசனத்தை அடிப்படையாகக் கொண்டு, காரை முக்கிய கதாப்பாத்திரமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்திற்கும் , கதைக்கும் டைட்டிலிற்கும் சம்மந்தமே இல்லை. ஆனாலும் ஆங்காங்கே சிரிக்க வைத்து விடுகிறார்கள் என்பதென்னவோ நிஜம்..!

அதாவது ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அவரது அக்கா லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி இவர்களது அம்மா தீபா சங்கருடன் சென்னையில் வசித்து வருகின்றனர். ரொம்ப கஷ்டப்படுவதன் காரணமாக லக்ஷ்மி பிரியாவிற்கு திருமணம் ஆகாமல் உள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு ஜூவல்லரியில் வேலை பார்த்து குடும்பத்தை சமாளித்து வருகிறார். இச்சூழலில் இவர்களுக்கு 10 லட்சம் மதிப்புள்ள ஒரு கார் பரிசாக கிடைக்கிறது. இதை வைத்து தனது அக்காவிற்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று திட்டமிடுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ், அந்த சமயத்தில் விலகிப் போன இவரது அண்ணன் கருணாகரன் அந்த கார் தனக்குத்தான் சொந்தம் என்று பிரச்னை செய்கிறார். இதனால் கார் போலீசிடம் மாட்டிக் கொள்கிறது. இறுதியில் அந்த கார் யார் கைக்கு போய் சேர்ந்தது என்பது தான் சொப்பன சுந்தரி படத்தின் கதை.

ஐஸ்வர்யா ராஜேஷ் செல்கட் செய்த ரோலில் பக்காவாக ஸ்கோர் செய்கிறார். கடை நிலை குடும்பத்தில் இருந்து ஒரு போராடும் பெண்ணை கண் முன் காட்டுகிறார். பெட்டில் கிடக்கும் அப்பா, எதுவுமே தெரியாத அம்மா, கல்யாணக் கண்வோடு காத்திருக்கும் அக்கா, பொறுப்பில்லாத அண்ணன் என்று இந்த நால்வரையும் சமாளித்து வாழும் வாழ்க்கையை அப்பட்டமாக அம்பலபடுத்தியுள்ளார் ஐஸ்வர்யா. தனது அண்ணனிடமும், அவரது மைத்துனர் மைம் கோபியையும் ஒரே ரேன்க்கில் மரியாதை கொடுத்து விளிப்பதும், தன்னை கண்ணாலேயே பார்த்து ரசித்து சித்ரவதை செய்யும் இன்ஸ்பெக்டரை சமாளித்து கடைசியில் அவரை இக்கட்டில் மாட்டிவிடும்போதும் ஐஸ்வர்யா காணாமல்போய் ‘அகல்யா’வே பரிணமளிக்கிறார்.
லக்ஷ்மி பிரியா வாய் பேச முடியாத ரோலில் நிறைய ஹோம் ஒர்க் செய்து இருப்பதால் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார்.. கிங்ஸ்லி வழக்கம் போல் ஒரே மாதிரியான காமெடி மாடுலேசனில் பேசி வெறுப்பேற்றுகிறார் மாற்றி கொண்டால் நலம். இன்ஸ்பெக்டராக நடிக்கும் சுனில்ரெட்டி நாம் வெறுக்கும் அளவுக்கு ஒரு மோசமான போலீஸ் அதிகாரியாக நன்றாக நடித்துள்ளார்.

பாலமுருகன் & விக்னேஷ் ராஜகோபாலன் என இரண்டு பேர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஆனால் கதைக்கும் ஒளிப்பதிவிற்கும் சம்பந்தமே இல்லாமல் உள்ளது. பல இடங்களில் தேவையே இல்லாமல் குளோசப் காட்சிகள் வருவதெல்லாம் ஏனென்றே தெரியவில்லை. . விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை மற்றும் அஜ்மல் தஹ்சீன் படங்கள் ஓகே வாக உள்ளது.

மொத்தத்தில் சின்னத்திரையில் வரும் போது பார்க்கத் தகுந்த படமிது

மார்க் 2.75/ 5

error: Content is protected !!