காஞ்சி : அத்திவரதர் தரிசனம் செய்ய போறீங்களா? அப்ப இதைப் படிச்சிடுங்க!

காஞ்சி : அத்திவரதர் தரிசனம் செய்ய போறீங்களா? அப்ப இதைப் படிச்சிடுங்க!

ஆரம்பத்திலேயே ஒரு வார்த்தையில் சொல்லி விடுகிறேன் :அத்தி வரதர் தரிசன ஏற்பாடுகளுக்கு நான் கொடுக்கும் மதிப்பெண் பூஜ்யம்.ரொம்ப முடியாதவர்களை வயதானவர்களை கூட்டிச் செல்வது பற்றி யோசித்துக் கொள்ளுங்கள்.வாட்ஸ் அப் forward செய்தியை நம்பாதீர்கள்.என் அநுபவம் மிக மோசம். முதியவர்களுக்கான பேட்டரி கார்களைப் பற்றி அவர்களுக்குச் செய்யப் பட்டுள்ளதாகச் சொல்லப் படும் வசதிகள் பற்றி எந்த அறிவிப்புப் பலகையும் கிடையாது. Nay I help you என்று உட்கார்திருக்கும் காவல்துறை நபர்களுக்கும் தெரியவில்லை.பதில் சொல்ல யாருக்கும் பொறுமையும் இல்லை. நான் மட்டுமல்ல அத்தனை பேரும் திட்டித் தீர்க்கிறார்கள் டிவி செய்திகளையும் வாட்ஸ் அப் செய்தி பரப்பியவர்களையும்.

நேற்று முன்தினம் திங்கள் அன்று அத்தி வரதர் தரிசனத்துக்கு நாங்கள் குடும்பமாக ஒரு பன்னி ரண்டு பேர் கொண்ட குழுவாகச் சென்றோம்.வாட்ஸ் அப் மெசேஜ் மற்றும் டி.வி செய்திகளின் அடிப்படையில் சிறிதளவு கூட நடக்க , ஐந்து நிமிடம் நிற்க இயலாத அம்மாவை( 75 வயது) கூட்டிச் சென்றோம்.ஆனால், முதியோர்களுக்குத் தனியாக என்று எதுவுமே இல்லை.ஆறு மணி நேரம் க்யூவில் ஒரே தள்ளுமுள்ளுவில் வீலல் சேரில் தள்ளிக் கொண்டு போய்த்தான் தரிசனம் செய்ய வைத்தோம். வீல் சேர் கூட முதல் மூன்று மணி நேரத்தில் கிடைக்கவில்லை. பேட்டரி கார்கள் இயங்குவதை கோபுரவாசல் தாண்டி நான்கைந்து மணி நேரக் க்யூவிற்குப் பிறகு காண நேர்ந்தது. பேட்டரிகார் பற்றி விசாரித்தால் பதில் யாருக்கும் தெரியவில்லை.பின்னால் இருப்பவர்கள் தள்ளித் தள்ளி விடுவதில் பன்னிரண்டு பேரும் தனித்தனி தீவாகி விட்டோம் .பதினோரு மணி முதல் காத்திருந்து ஆறு மணிக்குதான் முப்பது விநாடி தரிசனம் கிடைத்தது.வீல் சேரில் சென்ற அம்மா வும் தள்ளிச் சென்ற என் தம்பி மனைவியும் ஐந்து மணிப் போல தரிசனம் முடித்திருக்கிறார்கள்.

இதில் தரை முழுதும் குட்டிக்குட்டி கற்கள் நிறைந்த மணல். நடடக்க சிரமம். அது போக கோசாலை வழியாகக் குறுகிய வரிசையில் செல்லும் இடத்தில் தரை முழுதும் சின்னஞ்சிறு கூழாங்கல் போன்ற தினுசில் ஆனால் சிறிது கூர்மையான கற்கள் பாதங்களைப் பதம் பார்க்கிறது.காற்று இல்லை. ஒவ்வொருவரும் வியர்வையில் குளித்து அதை அடுத்திருப்பவர் மீதும் இழைத்து…ஐயோ கொடுமை. அவ்வப்போது குபீர் குபீரெனக் கிளம்பும் வியர்வை நாற்றம் குடலைப் புரட்டிக் கொண்டு வந்தது.ஆங்காங்கே RSS மற்றும் VHP பதாகைகள். ஆனால் சர்வீசுக்கு யாருமில்லை. குறுகிய கம்புத்தடுப்பு வரிசைக்குள் செல்லும் போது மட்டும் குடி தண்ணீரைப் பிளாஸ்டிக் குவளைகளில் விநியோகித்தனர்

விஹெச்பியினர்.கிட்டத்தட்ட ஏழு மணிநேரக் காத்திருப்பு. திருப்பதியில் காத்திருப்பது போல் அல்ல. தள்ளுமுள்ளும் வியர்வை நாற்றமும் கடுமையான இடநெருக்கடியும் கால்களுக்குகக் கற்கள் கொண்ட பாதையும் அநுபவிக்க வேண்டும். வரிசைகளில் நிற்கும் போது தண்ணீர் மட்டும் ஆங்காங்கே விற்கிறார்கள். சில இடங்களில் குடிநீர்க்குழாய்கள்.தாகம் தொண்டையை வறட்டி எடுத்தாலும் தண்ணீர் அருந்த பயம்.தண்ணீரைக் குடித்துவிட்டால் அதை சிறிது நேரத்தில் இறக்கியாக வேண்டுமே…உபாதை கழிக்க வழியில்லை.க்யூவில் இருந்து வெளியேறவோ மீண்டும் உள்ளே நுழையவோ முடியாது.நாக்கு வறண்டாலும் தண்ணீர் குடிக்கப் பயந்தோம்.

பக்தர்கள் இப்படிச் சிரமப்பட்டு மணிக்கணக்கில் நின்றால் ஏகப்பட்ட பேர் விவிஐபி-கள் என்ற போர்வையில் சர்வசாதாரணமாகப் போய் கிட்டே நின்று தரிசித்திருக்கிறார்கள்.க்யூ நகராமல் மணிக்கணக்கில் நின்றதற்க்குக் காரணம் ஒரு லேடி விஐபி வந்ததுதான் என்பதை அன்றிரவு அறிந்த போது வந்த கோபம் இருக்கிறதே …நான் வீட்டுக்குத் திரும்பிய போது மணி பத்து.தரிசனம் முடித்து வெளியே வரும் போது பார்த்தேன் மானங்கெட்ட. மயான மார்க்கத்தினர் ஆங்காங்கே தண்ணீர் பாட்டில் சமோசா என விற்றுக் கொண்டிருந்தனர்.

ஒலி பெருக்கியில் ஸகஸ்ரநாமம் ஒலிக்கிறது. அருகில்இருப்பவர் பேசுவது புரியாத அளவு மந்திர ஒலி. இந்த மந்திர ஒலியைக் காதில் வாங்குவது கூட ஹராம் இல்லை போலும் மயானங்களுக்கு.மொத்தத்தில் மட்டமான நிர்வாகம்.

அகஸ்தீஸ்வரன்

Related Posts

error: Content is protected !!