சீனனின் டவுசரை இந்தியா அவிழ்த்து விட்டுவிட்டது!

சீனனின் டவுசரை இந்தியா அவிழ்த்து விட்டுவிட்டது!

சீனாவின் App களை தடை செய்ததால் சீனனுக்குப் பொருளாதார ரீதியாக நிறைய நஷ்டம் என்பது உண்மைதான். ஆனால் அதன் பின்னணி அதற்கும் மேலானது. “சீனாக்காரன் ஒரு வெத்துவேட்டு” என்று மேற்கத்திய நாடுகளுக்கு, குறிப்பாக அமெரிக்கர்களுக்கு உணர்த்துவது தான் அதன் நோக்கம். ஏனென்றால் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் எந்த நாடும் சீனாவை எதிர்த்துப் பேசியதில்லை. அதன் மீது பெரிய நடவடிக்கைகளை எடுக்க வில்லை. ஆனானப்பட்ட அமெரிக்காவே வார்த்தைகளை அளந்துதான் இதுவரை பேசிக் கொண்டிருக்கிறது. டொனால்ட் ட்ரம்ப்பினால் கூட ஒரு அளவிற்குமேல் சீனர்கள் மீது பொருளாதார நடவடிக்கைகள் எதனையும் எடுக்க முடியவில்லை. அமெரிக்காவே அப்படி என்றால் ஐரோப்பியர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஏறக்குறைய பயந்து நடுங்கிக் கொண்டுதான் இருந்தார்கள்.

காரணம், சீனர்கள் மீதான இனம்புரியாத பயம். சீனா சகட்டுமேனிக்கும் அமெரிக்கத் தயாரிப்பு களைக் காப்பியடித்துத் தயாரித்துக் கொண்டிருந்தது. மோட்டார் கார் முதல் விமானம் வரைக்கும் சீனத் தயாரிப்புகள் எல்லாமே பிற நாடுகளின் தொழில் நுட்பத்தைத் திருடி உருவாக்கியதுதான். அதுபோல ஒரு இண்ட்டலெக்சுவல் ப்ராபர்டி திருட்டினை இந்தியாவோ அல்லது வேறு ஒரு நாடோ செய்திருந்தால் அமெரிக்கர்கள் மிகப் பெரும் பொருளாதாரத் தடைகளைச் செய்திருப்பார்கள். திருடிய தொழில் நுட்பத்திற்கு வட்டியும் முதலுமாகத் திருப்பித் தர வேண்டியிருக்கும். ஆனால் அமெரிக்கா சீனர்களைப் பார்த்து முனகியதுடன் மட்டுமே நிறுத்திக் கொண்டது. கூகுளின் ரகசியங்களைத் திருடி பைடூ உருவாக்கியவர்கள் சீனர்கள். அமேஸானைத் திருடி அலிபாபாவை உருவாக்கியவர்களும் அவர்களே. இதை இன்னொரு நாடு செய்திருந்தால் என்னவாகியிருக்கும் என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

அதற்கேற்றார்ப் போல சீனர்கள் பேட்டை ரவுடிகளைப் போல நடந்து எல்லாரையும் மிரட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களைக் கண்டு அச்சப்படாத நாடுகளே உலகில் இல்லை என்பதுதான் உண்மை. இந்தியா உட்பட. அதாகப்பட்டது “மோடி வருவதற்கு முன்னிருந்த” இந்தியா உட்பட. சீனன் இந்தியப் பகுதிக்குள் நுழைந்தால் காங்கிரஸ் கோழைகள் தொடை நடுங்கிச் செத்தார்கள். அதிகபட்சம் பூனையை விட்டு “மியாவ்” எனச் சொல்ல வைத்ததுடன் சரி. கேலிச் சிரிப்புடன் சீனன் சகட்டுமேனிக்கு உள்ளே ஏறி வந்து அடித்துக் கொண்டிருந்தான். அதாகப்பட்டது மோடி வரும்வரை.

மோடி வந்தவுடன் நிலைமை மாறியது. ஆரம்பத்தில் சீனர்களுடன் நல்லுறவு பேண தலைகீழாக நின்றார் மோடி என்பது எல்லோரும் அறிந்ததுதான். அதேசமயம் சீனர்களை அவர் நம்ப வில்லை. மொத்த ராணுவத்தையும் முழுமூச்சாக நவீனப்படுத்திக் கொண்டிருந்தார் அவர். சீனன் எப்போது வேண்டுமானாலும் தன் முதுகில் குத்துவான் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.

இந்தியர்களிடம் நான் திரும்பத் திரும்ப நான் படிப்பதெல்லாம் “சீனாக்காரனிடம் இப்படியாகப் பட்ட ஏவுகணை இருக்கிறது. அவனிடம் ஆயிரக்கணக்கான விமானங்கள் இருக்கின்றன. டாங்கி கள் இருக்கின்றன….” என்று பூச்சாண்டித்தனமாக எழுதியிருப்பதனைத்தான். இந்தியாவை ஒப்பிடுகையில் சீனனிடம் எல்லாமே அதிகமாக இருப்பது உண்மைதான். ஆனால் போர் என்று வந்தால் சீனன் மரண அடி வாங்குவான் என்கிறேன்.

அது எப்படி என்று கொஞ்சம் பார்க்கலாம்.

லடாக்கில் போர் மூண்டால் அது பெரும்பாலும் விமானப் போராகத்தான் இருக்கும். தரைப் படைகளுக்குள் சண்டை நடந்தால் இந்தியர்கள் சீனர்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டிவிடுவார்கள். கடந்த நாற்பது ஆண்டுகளில் சீனா எந்த நாட்டுடனும் போர் செய்யவில்லை. எனவே இப்போது இருக்கும் சீனப்படைகளுக்குப் போர் அனுபவம் என்பது அறவே இல்லை. அதற்கும் மேலாக லடாக் போன்ற ஆக்ஸிஜன் குறைந்த மலைப்பகுதிகளில் சீனர்கள் போர் புரிந்ததே இல்லை. இந்தியாவை வென்றது கூட நேருவின் கோழைத்தனத்தால் மட்டுமே. அதற்கு நேரெதிராக இந்திய ராணுவம் தொடர்ந்து போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. மலைப்பகுதிகளில் போரிடுவது இந்திய ராணுவத்திற்கு ஒரு பிரச்சினையே இல்லை. ஏனென்றால் பாகிஸ்தானுடன் அவர்கள் செய்கிற போரெல்லாம் மலைப்பகுதிகளில் மட்டும்தான். கார்கில் போருக்குப் பிறகு இந்திய ராணுவத்தின் பெரும்பகுதி மலைப்போர்களில் சிறந்த பயிற்சி எடுத்தவர்கள்.

எனவே சீனா தனது படைவீரர்களை அனுப்பி இந்தியாவுடன் போரிடத் தயங்கும். அம் மாதிரியான சூழ்நிலையில் பெருமபாலும் விமானப் போர் நடக்கவே வாய்ப்புகள் உண்டு. விமானப் போரில் சீனா வெல்வதற்க்கு பத்துசதவீத வாய்ப்புகள் கூட இல்லை. காரணம் சீனர்களிடம் விமான தளங்கள் எதுவும் அருகில் இல்லை. ஆயிரம் மைல்களுக்கு அப்பால் திபெத்தில் நான்கு விமான தளங்கள் இருக்கின்றன. அதில் லாசா விமானதளம் மட்டுமே பெரியது. மற்ற மூன்றும் சிறிய விமானதளங்கள் மட்டுமே. லாசா மலைப்பகுதியில் இருப்பதால் சீன போர் விமானங்களுக்கு ஏராளமான எரிபொருள் செலவாகும். அந்த எரிபொருளைச் சேமிப்பதற்கு ஐம்பது சதவீத ஆயுதங்களை மட்டுமே அந்த விமானங்களில் ஏற்ற முடியும், அந்தக் குறைந்த அளவு ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து லடாக்கில் குண்டு வீசிவிட்டுத் திரும்பச் செல்வதற்குள் எரிபொருள் காலியாகிவிடும்.

சீனர்களிடம் இருக்கும் ஜெ20 போன்ற விமானங்கள் அமெரிக்க விமானங்களைக் காப்பியடித்து உருவாக்கியவை. அது எந்த அளவிற்கு நம்பகமானவை என்பதில் சீனர்களுக்கே நம்பிக்கையில்லை. உயரமான மலைப்பகுதிகளில் அவை இன்றுவரை இயக்கப்பட்டு, சோதனை செய்யப்படவில்லை. அவர்களிடம் இருக்கும் பிற விமானங்களும் பழைய மாடல்கள்தான். அந்த விமானங்கள் திபெத்திலிருந்து லடாக்கிற்கு வந்து குண்டுவீசிவிட்டு திரும்பிச் செல்லும் என்கிற நம்பிக்கை சீனர்களுக்கே இல்லை. அதற்கு நேரெதிராக இந்தியாவிடம் ரஃபேல், மிராஜ், மிக் போன்ற விமானங்கள் இருக்கின்றன.

சீனாவின் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், நான்கு திபெத்திய மலைப்பகுதிகளில் இருக்கின்ற விமான தளங்களுக்கு எதிராக இந்தியாவிடம் 15 சமதள விமானதளங்கள் இருக்கின்றன. அதாகப்பட்டது லடாக்கிலிருந்து 600 மைல் சுற்றளவுக்குள் இந்தியாவிடம் 15 பெரிய, சமதளத்தில் அமைந்த விமான தளங்கள் இருக்கின்றன. சீன விமானம் வந்தால் இந்திய விமானங்கள் மிக எளிதாக அவற்றை விரட்டியடித்துவிடும்.

எனவே சீனா பாகிஸ்தானிய விமானதளங்களை உபயோகிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது. போர் மூண்டால் அந்த விமானதளங்களை அப்படி உபயோகிப்பதை அமெரிக்கா அனுமதிக்காது. ஒருவேளை பாகிஸ்தானின் எஃப்16 விமானங்களை உபயோகித்தால் பாகிஸ்தானை அமெரிக்கா நாறடித்துவிடும். எஃப்16 கண்ட்ரோல் முழுக்க அமெரிக்காவிடம் இருக்கிறது. ஒற்றை நிமிடத்தில் அதனை அமெரிக்கா நிறுத்திவிடும். விமானம் மேலெழும்பவே முடியாது.

இப்போது இருக்கிற நிலையில் சீனா அதிகபட்சம் 160 விமானங்களை மட்டுமே போரில் ஈடுபடுத்த இயலும். அதற்கு மேல் இயக்க அதனிடம் விமானதளம் இல்லை. அதற்கு எதிராக இந்தியாவுக்கு அப்படியான பிரச்சினைகள் எதுவும் இல்லை. சீனனை இந்திய விமானப்படை துவம்சம் செய்துவிடும்.கடல் வழியாகவும் சீனன் இந்தியாவை ஒன்றும் செய்ய இயலாது. இந்தியப் பெருங்கடலில் இந்தியாதான் பேட்டை ரவுடி. அதனை மீறி சீனனால் எதுவுமே செய்ய இயலாது. அமெரிக்காவும் கோதாவில் இறங்கிவிடும் என்கிற அச்சம் சீனனை அச்சமடைய வைக்கும்.

அதற்கும் மேலாக மலாக்கா ஸ்ட்ரெயிட்டில் ஒரு சீனக் கப்பலும் போக முடியாமல் இந்தியா கழுத்தை இறுக்கிவிடும். சீனாவின் வர்த்தகத்தின் பெரும்பகுதி மலாக்கா ஸ்ட்டெயிட் வழியாகத்தான் நடக்கிறது. அந்த வழியாகத்தான் பெட்ரோல் போன்ற பொருட்கள் சென்றாக வேண்டும். மலாக்கா ஸ்ட்ரெயிட் இந்தியாவின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
கடலில் போகும் பெரிய அளவு சரக்குக் கப்பல்கள் கண்ட இடத்தில் போகமுடியாது. குறைந்தது 30 மீட்டர் ஆழமுள்ள கடல் வழியாகத்தான் அவை சென்றாக வேண்டும். இல்லாவிட்டால் தரை தட்டிவிடும். சீனக் கப்பல்கள் இந்தியாவின் அந்தமான், நிக்கோபர் தீவுகளுக்கு மத்தியில் இருக்கும் ஒரு சிறிய, 30 அடி ஆழமான கடல்வழியாக “மட்டுமே” சீனாவுக்குப் போகவும், அங்கிருந்து பொருட்களை எடுத்துக் கொண்டு செல்லவும் முடியும். அந்தக் கடல்வழி இந்தியாவிற்குச் சொந்தமானது. சீனா வாலாட்டினால் இந்தியா அந்த வழியை அடைத்துவிடும். அதற்குப் பிறகு சீனன் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாக வேண்டும்.

சீனனிடம் அணுகுண்டு இருக்கிறதே, ஆனானப்பட்ட மிசைல் எல்லாம் இருக்கிறதே என்று சொல்கிறவன் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். சீனனிடம் மட்டுமே அணுகுண்டு இருக்கவில்லை. சீனனிடம் மட்டுமே ஏவுகணைகள் இருக்கவில்லை. அதற்கும் மேலாக இந்தியா மீது அணுகுண்டு போட்டால் என்ன நடக்கும் என்பது சீனனுக்கு நன்றாகவே தெரியும். அதையெல்லாம் செய்யுமளவிற்குத் துணிச்சல் உள்ளவன் சீனனில்லை. வெறுமனே உதார் விட்டுக் கொண்டு திரிகிற ரவுடியான சீனனின் டவுசரை இந்தியா அவிழ்த்துவிட்டுவிட்டது.

நிலைமை புரியாமல் கொம்பு சுத்தித் திரிந்த ஜின்பிங்கிற்கு இது கெட்ட காலம். அவரது நாட்கள் எண்ணப்படுகின்றன. மீண்டும் சொல்கிறேன். சீனர்கள் இந்தியாவை வெல்வது முடியவே முடியாத காரியம். ஆனால் சொந்த நாட்டிலேயே இருக்கிற துரோகிகளை என்ன செய்வது?

ஸ்ரீநரேந்திரன்