கொரோனாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த மருந்துகள் பெரும் பாதிப்பு!

கொரோனாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த மருந்துகள் பெரும் பாதிப்பு!

மக்களுக்கு மரண பயம் காட்டி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சோதனை முறையில் பயன்படுத்திப் பார்க்கும்படி உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த மாற்று மருந்துகள் நோயாளிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிடைத்துள்ள மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன அதனால் இந்த மருந்துகளின் பயன்பாடு குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தீவிர பரிசீலனை மேற்கொண்டுள்ளது.

மலேரியா நோய்க்கு இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்த மாத்திரை ஹைட்ராக்ஸிக் கிலோராக்குவின். இந்த மாத்திரை கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களைக் காப்பாற்றுகிற நம்பிக்கை நட்சத்திரம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வர்ணித்தார்.

எபோலா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ஊசி மருந்து ரெம் டெஸ்விர் . இந்த ஊசி மருந்து மிகவும் லேசான கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு பெரிதும் பயன்படுவதாக மேலைநாடுகளில் தெரிவிக்கப்பட்டது.

எச்ஐவி வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு லோபினாவிர்.ரிட்டோனாவிர் ஆகிய மருந்துகள் ஓரளவுக்கு வெற்றிகரமாக பயன்பட்டு வந்தன. இந்த இரண்டு மருந்துகளையும் ஒன்றாகச் சேர்த்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டது.

உயிருக்கு உலை வைக்கு கொரோனா வைரஸூக்கு உறுதி செய்யப்பட்ட பயன்கள் உள்ள மருந்து தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் மாற்றாக ஏற்கனவே மக்களால் பயன்படுத்தி அந்த மருந்துகளை சோதனை முறையில் பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்யலாம் என்று உலக சுகாதார நிறுவனமும் அறிவித்தது அதன் அடிப்படையில் இந்தியாவில் மத்திய சுகாதார நிறுவனம் ரெம்டெஸ்விர். ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின். லோபினாவிர்.ரிட்டோனாவிர் ஆகிய மருந்துகளை சோதனை முறையில் பயன்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் முன்வந்தது.இதற்கிடையில் கரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளிடம் ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் பெரும் பாதிப்புக்களை உருவாக்கி வருவதாக மருத்துவ சோதனைகளை ரத்து செய்வதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

ரெம்டெஸ்விர் பூசி மருந்து சோதனை முறையில் பயன்படுத்திய கொரோனா வைரஸ் நோயாளிகளின் ரத்தத்தில் அல்கலின் பாஸ்பேட் உப்புக்கள் அளவுக்கு அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது இந்த அல்கலின் பாஸ்பேட் உப்புக்கள் நோயாளிகளின் கல்லீரலை கடுமையாக பாதிக்கும் .நோயாளிகளின் கல்லீரல் செயல் இழக்கும் அபாயம் உள்ளது என்று மருத்துவர்கள் எச்சரித்தனர். நோயாளிகளின் கல்லீரல் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு டயாபடீஸ் நோய் வரும் அபாயம் உள்ளது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். எச்ஐவி நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த லோபினாவிர்.ரிட்டோனாவிர் ஆகிய மருந்துகள் கூட்டாகவும் தனியாகவும் கரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு எந்த வகையிலும் உதவியாக இல்லை என்று இந்தியாவிலும் பல வெளிநாடுகளிலும் நடந்த சோதனை சோதனை ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.மாற்று மருந்துகளான இவற்றை பயன்படுத்துவது குறித்து மிகவும் விழிப்புடன் இருப்பது அவசியம் என்றும் கண்காணிப்பு கட்டாயம் தேவை என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின் பேரில் இந்த மருந்துகளை சோதனை அடிப்படையில் பயன்படுத்துவதையும் மத்திய சுகாதார அமைச்சகம் தடை செய்வது பொருத்தமாக அமையும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கருத்து சொல்லி வருகிறார்கள்

Related Posts