ஜஸ்ட் 100 நாட்கள் டெய்லி 9 மணி நேரம் தூங்கும் வேலைக்கு ஒரு லட்சம் சன்மானம்!

ஜஸ்ட் 100 நாட்கள் டெய்லி 9 மணி நேரம் தூங்கும் வேலைக்கு ஒரு லட்சம் சன்மானம்!

நமக்கிருக்கும் 24 மணி நேரத்தில் சராசரியாக எட்டு மணிநேரம் உறங்குகிறோம் எனும்போது நம் வாழ்வில் மூன்றில் ஒரு பங்கு உறக்கத்தில் செலவிடுகிறோம். தூக்கமின்மையால் ஏற்படக்கூடிய உடல் மற்றும் மனநலம் சார்ந்த பாதிப்புகள் ஆரோக்கியமான உறக்கத்திற்கான வழிமுறைகள் பற்றி ஏகப்பட்ட ஆராய்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இச்சூழலில் பெங்களூரு வில் உள்ள வேக் ஃபிட் என்ற நிறுவனம் ஒரு நாளைக்கு 9 மணி நேரம் வீதம் 100 நாட்கள் தூங்கும் வேலைக்கு விண்ணப்பம் அனுப்பும்படி அறிவித்திருந்தது. 30 நாடுகளில் இருந்து 1.7 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் இருந்து 23 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தூக்கம் வராத வர்களுக்கு உதவி செய்து அவர்களை தூங்கச் செய்வதற்காக என இந்த சேவை நிறுவனம் பெங்களூர் நகரத்தில் ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் துவக்கப்பட்டுள்ளது. வேக்பிட் ஒரு சிறு தொழில் நிறுவனம் ஆகும்.

இந்தியாவில் ஒரு வருடத்தில் 10 மில்லியன் மக்கள் தூக்கமின்மையால் பாதிப்படைகிறார்கள் என ஆய்வுகள் சொல்கின்றன. தூக்கமின்மை என்பது பல வகையில் இருக்கலாம். படுத்த பின் தூங்க முடியாமல் மெத்தையில் புரண்டு கொண்டு இருப்பது, சில மணிநேரம் தூக்கத்திற்கு பிறகு முழிப்பு வந்து விட்டால், அதன் பிறகு தூங்க முடியாமல் போவது, இல்லையேல் பல மணி நேர தூக்கத் திற்கு பிறகும் அசதியாக உணர்வது, என எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். தூக்க மின்மை என்பது ஒரு தனிப்பட்ட பிரச்சனையாக கருதப்பட்டாலும், அது பல்வேறு உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால் அது குறித்து ஆராய்ச்சி செய்ய தற்போது தேர்வு செய்யப்பட்டவர்கள் இந்தியா, ஸ்லோவாக்கியா, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்தியாவிலிருந்து மும்பை, பெங்களூரு, நோய்டா, ஆக்ரா, குர்கான், டெல்லி, சென்னை, புனே, போபால் ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட 23 பேரும் 22 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்.

விண்ணப்பதாரர்களுக்கான தகுதிகள்:

விண்ணப்பதாரர் பட்டதாரியாக இருக்கவேண்டும். வகுப்பு பாடம் கேட்கும் பொழுதும்கூட தூங்க கூடிய திறமை கொண்டவர்களாக அவர்கள் படிக்கும்போது இருந்திருக்க வேண்டும்.

படிப்பை முடித்த பிறகு தலையணையில் தலை சாய்த்த பத்து முதல் இருபது நிமிடங்களுக்குள் தூங்க கூடியவராக இருக்க வேண்டும்.

எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையிலும் தூங்குகிற பழக்கம் இருக்க வேண்டும் சப்தம், வெளிச்சம், அலாரம் அடித்தல், மணி ஓசை இவை கேட்டாலும் அவர்கள் தலையணையில் தலை வைத்த 20 நிமிடத்திற்குள் தூங்கிவிட வேண்டும். தூங்குவதற்கு முன்பு அமைதியாக மன அழுத்தம் இல்லாமல் மனதை எளிமையாக்கிக் கொள்ள வேண்டும்.

தூங்கும் வேலைக்கு விண்ணப்பித்த இவர்கள், தாங்கள் ஏற்கெனவே பார்க்கும் வேலையை ராஜினாமா செய்ய வேண்டாம். அவரவர் வீட்டில் தூங்கினால் போதும். தங்கள் வீட்டில் தூங்க ஆரம்பிக்கும் பொழுது வேக் ஃ பிட் கம்பனி தரும் ஒரு கருவியை பொருத்திக்கொள்ள வேண்டும். அந்தக் கருவி தூக்கத்தின் தன்மையை தொடர்ச்சியாக பதிவு செய்து கொண்டே இருக்கும். மூடிய கண்ணுக்குள் விழிகள் சுழல்வதையும் அந்தக் கருவி பதிவு செய்யும் .

தேர்வு முறை

முதலில் விண்ணப்பதாரர்கள் பயோடேட்டா உடன் விண்ணப்பம் அனுப்ப வேண்டும். இப்படி வந்த விண்ணப்பங்கள்தான் 1.7 லட்சம்

விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலித்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கடிதம் அனுப்பப்படும்.

முதல் சுற்று முடிந்த பிறகு 2,500 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு வேக்ஃபிட் கம்பெனி கடிதம் ஒன்றை அனுப்பியது. நீங்கள் இந்த தூங்கும் வேலையை தேர்ந்தெடுக்க என்ன காரணம் என்று விளக்கும் வீடியோ பதிவு ஒன்றை 2500 பேரும் அனுப்ப வேண்டும்.

1500 விடியோக்கள் விண்ணப்பதாரர்கள் இடமிருந்து வந்தன. இந்த வீடியோ பதிவில் பலர் பாட்டு மூலமாக தங்கள் கருத்தை பதிவு செய்திருந்தார்கள். பலர் கார்ட்டூன் சித்திரங்களை உருவாக்கி அவற்றைப் பேசவைத்து விடியோ பதிவு அனுப்பியிருந்தார்கள். இந்த 1 500 பேரில் இருந்து 23 பேரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதற்கு 4 பேரைக் கொண்ட ஒரு தேர்வு குழு நியமிக்கப்பட்டது.

சமூகத்தில் மிகவும் பிரபலமான இந்த 4 பேர் இந்தக் குழுவில் இருந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தக் குழு கூடி நேர்முகத்தேர்வு நடத்தினார்கள். நேர்முகத்தேர்வு தான் மூன்றாவது இறுதி சுற்று தேர்வு ஆகும்.

நேர்முகத் தேர்வில் 1500 பேரிலிருந்து 23 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்களுக்கு உடனடியாக தூக்கத்தை பதிவு செய்யும் கருவி கையில் தரப்பட்டது. இவர்கள் வீட்டு முகவரிக்கு வேக் ஃபிட் நிறுவனத்தின் படுக்கை விரிப்பும் தலையணைகளும் அனுப்பி வைக்கப்படும். அவை கிடைத்ததும் 10 நாட்களுக்குள் இவர்கள் 100 நாள் தூக்க வேலையைத் துவக்க வேண்டும் என்று அறிவுறுத்தி அனுப்பி இருக்கிறார்கள்.

இந்த 23 பேருடைய அனுபவங்களைப் பதிவு செய்து அவற்றின் அடிப்படையில் தூக்கத்திற்கான தேர்வுகளை உருவாக்க வேக்ஃபிட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

100 நாட்கள் தூங்க வேண்டிய இந்த வேலைக்கு சம்பளம் 1 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தூக்கமின்மை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், தூக்கமின்மைக்கும் மரபணு மாற்றங்களுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றி ஆராயப்பட்டன.

குறிப்பாக உலகளவில் அரசியல்வாதிகளும் வர்த்தகப் பிரமுகர்களுமே தூக்கமின்மையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவருவதாக கண்டறியப்பட்டுள்ளது. சிலர் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரங்களில் தூங்குவதாகவும் இன்னும் சிலர் ஆறு மணி நேரங்களுக்கும் குறைவான நேரத்தில் தூங்குவதாகவும் தெரியவந்துள்ளது.

உலகின் அண்மைய தலைவர்களான வின்ஸ்டன் சர்ச்சில், பராக் ஒபாமா மற்றும் ரிச்சர்ட் பிரான்சன் ஆகியோரின் உறக்க நேரங்கள் சராசரியாக 5-6 மணிநேரங்கள் இருந்துள்ளன. மேலும் உலகம் முழுவதும் 500 வரையிலான கம்பெனிகளின் CEO பதவியிலுள்ளோர் ஆறு மணி நேரத்துக்கும் குறைவான காலத்திலேயே உறங்கியுள்ளனர் என்று தெரிய வந்ததாக்கும்.

Related Posts

error: Content is protected !!