June 7, 2023

சிலுக்குவார்பட்டி சிங்கம் – படத்தின் விமர்சனம்!

தற்போதைய வாழ்க்கை செல் போன் மற்றும் இயந்திரயுகமாகி போய் விட்டது. காரணம் இன்று மனிதர்கள் போய் செய்ய வேண்டிய வேலைகளை, போன்களும் இயந்திரங்களும் செய்கின்றன. அதே சமயம் இயந்திரங்கள் செய்ய வேண்டிய வேலைகளை மனிதர்கள் செய்கின்றனர். சிம்பிளாக சொல்வதானால் இன்றைய மனிதர்கள், மனிதர்களோடு பழகுவதை விட இயந்திரங்களோடே இல்லறம் நடத்துவதன் விளைவு ‘சிரிப்பு’என்ற உணர்வே இல்லாத இயந்திரமாய் மனிதர்கள் மாறிப் போனார்கள். அப்படியாப்பட்டவர்களுக்கு அருமருந்தாக தயாராகி ரிலீஸ் ஆகி இருக்கிறது . ஆனா சிலுக்குவார்பட்டி சிங்கம்’ இந்த படத்துக்கு போகும் முன் ஒரு எச்சரிக்கை – தியேட்டர் பார்க்கிங்-கில் வாகனத்தை நிறுத்துப் போது ஹெல்மெட் அல்லது சீட் பெல்ட்டை கழட்டி விட்டு போகும் போது உங்கள் மூளையையும் கொஞ்சம் வண்டியிலேயே எடுத்து வைத்து விட்டு தியேட்டருக்குப் போனால் உங்களுக்கு சிரிப்புன்னா சிரிப்பு அம்புட்டு சிரிப்பு வரும்..ஆனா நீங்க தமிழ்நாடு போலீசில் வேலை பார்ப்பவராக இருந்தால் இந்த படம் ஓடும் தியேட்டர் பக்கம் கூட போயிடாதீங்க..!

ஒரு விஷயம் நினைவிருக்குதா?  ஒரு மனிதன் சிரிக்கும்போது அவனுடைய உடலில் பல ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன. .உடலின் இரத்த ஓட்டம் சீராகும். இதனால் இருதயத் துடிப்பு சீராகும். இரத்த அழுத்த நோய்கள் உள்ளவர்களுக்கு சிரிப்பு ஒரு சிறந்த மருந்து. சிரிக்கும் போது நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள பிராண வாய்வு நன்கு உட்சென்று உடலுக்கு புத்துணர்வைத் தரும். சிரிப்பதால் மன அழுத்தம், மன இறுக்கம், மன உளைச்சல் குறையும். ஜீரண உறுப்புகள் சீராக செயல்பட்டு மலச்சிக்கல் தீரும். சிந்தனை, செயல் அதிகரிக்க சிரிப்பே சிறந்தது. என்பதை உணர்வீர்கள்.

படத்தில் கதை இருக்குது.. ஆனா என்னன்னு தெரிஞ்சிக்கிட்டா படத்துகே போக மாட்டீங்க . ஏன்னா.. போன 27 வருஷமா (அதென்ன கணக்குன்னு கேட்டா? பதிலில்லை) எக்கச்சக்கமான படங்களில் நாம் பார்த்த கதை தான்.. காட்சிகள்தான்., வசனங்கள்.. ஆனால் இவிங்களும் தங்களை ரசிக்கும் படியாக வயிறு குலுங்க சிரிக்கும் படி படத்தை நகர்த்திக்கிட்டு போறாங்க.. நாயகன் விஷ்ணு விஷால், கருணாகரன் தொடங்கி யோகிபாபு, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், கருணாகரன் இப்படி ஏகப்பட்ட காமெடி ஆர்டிஸ்டிங்க கிச்சு முச்சு பண்ணிக்கிட்டே இருக்காங்க.. சில நேரம் அவிங்க பண்றது காமெடியா?-ன்னு யோசனை வர்றதுக்குள்ளே அடுத்த சீன்லே நெசமாவே ஹா ஹாஹா-ன்னு வாயை பிளக்க வைச்சிடுறாங்க.

கிளாமரை ஒரு கண்ணிலும் லவ்வை இன்னொரு கண்ணிலும் வைத்தப்படி வரும் நாயகி ரெஜினா. பிக்பாஸ் புகழை இந்த படத்தின் நாயகனுக்காக சிலுக்கு நேஞ்சில் வந்து ஆடிப்பாடி தாரை வார்த்து கொடுத்த ஓவியா.. சைக்கோ சங்கராக வரும் ரவிசங்கர் ஆகியோர் பங்களிப்பில் ஒரு எண்டர் டெயின்மெண்ட் படத்துக்குரிய முழு அந்தஸ்தை கொடுத்து காப்பாற்றி விட்டார்கள். ஆனால் ஒன்று தமிழ்நாடு போலீசின் மானத்தை எடுத்து விட்டார்கள்..

மொத்தத்தில் டைம் பாஸ் பண்ண நினைப்பவர்களுக்கு ஏற்ற படம் இது.

மார்க் 2.75 / 5