சிறுமிகளின் பிறப்பு உறுப்பைச் சிதைப்பதைத் தடுக்கத் தனிச்சட்டம்!- ஐ.நா. வலியுறுத்தல்!

சிறுமிகளின் பிறப்பு உறுப்பைச் சிதைப்பதைத் தடுக்கத் தனிச்சட்டம்!- ஐ.நா. வலியுறுத்தல்!

நவீன மயமாகி விட்ட இந்தக் காலக்கட்டத்திலும் ஆங்காங்கே நடக்கும் சிறுமிகளின் பிறப்பு உறுப்பைச் சிதைப்பதைத் தடுக்கத் தனிச்சட்டம் வேண்டும் என்று சமூகச் செயல்பாட்டாளர்களும் ஐநாவின் அமைப்புகளும் இன்று (செப்-20) விடுத்துள்ளனர்.

ஃபீமேல் ஜெனிட்டல் மியுட்டிலேசன்” என்ற கொடுமைக்கு எதிரான நாளாக பிப்ரவரி-6 -ம் தேதியை ஐ.நா அறிவித்துள்ளது. அப்படி என்றால் புரியாதவர்களுக்கு தமிழில் விளக்கம் ‘பெண் உறுப்பு சிதைவு’. இது போன்ற கொடிய செயல், ஆப்ரிக்க நாடுகளில் ஐம்பது சதவீத பெண்களுக்கு இன்று வரை வலுக்கட்டாயமாக நடத்துப்பட்டுவரும் ஒரு புனித சடங்கு என்றால் நம்ப சங்கடமாகத்தான் இருக்கும். ஆம்.. ஆப்ரிக்கா நாடுகளான சோமாலியா, சூடான், எகிப்து, உகாண்டா, கானா, உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் பெண்களில், எழுபது சதவீதத்திற்கும் மேல் இப்படி பெண் உறுப்பு சிதைவுக்கு உட்பட்டவர்கள் என்பது அதிர்ச்சி தகவல். அதன் எதிரொலியாகத்தான் ஐ.நா சபை, பெண் உறுப்பு சிதைவிற்கு எதிரான நாளாக பிப்ரவரி-6ம் தேதியை அறிவித்துள்ளது.

பெண் உறுப்பு சிதைவு என்று இன்றைய உலகம் இதற்கு பெயர் சூட்டி இருந்தாலும், ஆப்ரிக்க நாடு களில் கட்டாயமாக்கப்பட்ட இந்த சடங்கிற்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர் பெண் சுன்னத். அதாவது இஸ்லாமிய மதத்தில் ஆண்களுக்கு சுன்னத் என்பது கட்டாயம். அதேபோல் பெண்களின் பிறப்புறுப்பில் செய்யப்படும் அறுவைசிகிச்சைக்கு பெயர்தான் பெண் சுன்னத். இஸ்லாமிய மதத்தில் ஆண்களுக்கு மட்டும்தான் சுன்னத் உள்ளதென அதன் மதகுருமார்கள் அறிவித்தாலும், ஆப்ரிக்க நாடுகளில் அதிகமாக இந்த வழக்கத்தை பின்பற்றுவதும் அதே இஸ்லாமிய சமூகம்தான்.

“பெண்கள் சைத்தானின் வடிவங்கள் என்று புனித நுால்கள் சொல்லியுள்ளது. அவர்களுக்கு பாலுணர்வு மட்டுமே இருக்கும். அந்த பாலுணர்வை கட்டுப்படுத்தி அவர்களை ஒழுக்கமான பெண்ணாக இருக்கச் செய்யத்தான் இந்த செயல்” என்று அர்த்தமற்ற விளக்கத்தை அதற்கு காரணமாக அவர்கள் சொல்கிறார்கள்.

இந்த பெண் உறுப்பு சிதைவு என்பதை பெண்கள் பருவம் அடையும் முன்பே செய்துவிட வேண்டும் என்பது இதற்கு எழுதப்படாத விதி. அதாவது ஐந்து வயது முதல் ஏழுவயதிற்குள் இந்த சடங்கை முடித்துவிட வேண்டும். ஓடி விளையாடும் சிறுமியை பிடித்துவந்து வலுக்கட்டாயமாக இந்த செயலை அரகேற்றியபின் தான் அவள் துாய்மையடைந்துவிட்டாள் என்று அந்த சிறுமியின் தாய் பெருமை பேசுவார். பெண்ணின் பிறப்புறுப்பில் இருக்கும் “க்ளிட்டோரியஸ்” என்ற பகுதிதான் பெண்ணிற்கான உணர்ச்சி கூறுகள். பெண்ணின் பாலுணர்வு ரீதியான உந்துதலுக்கு இதுதான் முதல் காரணமாக இருக்கின்றது. இதை அறுத்து விட்டால் அந்த பெண்ணிற்கு பாலுணர்வு குன்றிவிடும் என்ற கருத்துதான் இந்த வன்கொடுமைக்கு அடிப்படையாக இருந்துவருகிறது.

அறுப்பது என்றால் முறையாக மருத்துவமனையில் மயக்க மருந்து கொடுத்து அல்ல; விளையாடி கொண்டிருக்கும் சிறுமியை சாப்பிட அழைப்பது போல் “இங்கே வா” என்று அழைத்து, நடக்கப் போகும் கொடுமையை அந்த சிறுமி பார்க்க கூடாது என்பதற்காக அந்த பெண்ணின் கண்ணை பொத்தி, அவளை இருட்டு உலகிற்கு கொண்டு சென்று, அதன் பின் சிறுமியின் கதறலோடு இந்த பாதக செயலை செய்கின்றனர். சாதாரணமாக சவரம் செய்யும் பிளேடுதான் இந்த ஆபரேசனுக்கு பயன்படுத்தப்படுகிறது.

க்ளிட்டோரியஸ் என்ற மேல் தோலை, ஆட்டை அறுப்பது போல் அறுத்து வீசிவிடுவது இதன் முதல் படி. அதற்கு அடுத்தது “லேபியா பிளாஸ்டர்” என்று சொல்லப்படும் பெண்ணுறுப்பு உதட்டுப் பகுதியை அறுத்து எடுத்து, அதன் பின் “வெஜைனா பிளாஸ்டி” என்று சொல்லபடும் பெண் உறுப்பை சிறு துளை மட்டும் விட்டு, துணி தைக்கும் நூலால் தைப்பது என்ற மூன்று நிலைகளில் இது செய்யப்படுகிறது. அறுப்பது முதல் தைப்பது வரை இத்தனை விஷயங்களையும் அரங்கேற்றுவது ஒரு மருத்துவர் அல்ல; அந்த ஊரில் இதற்கென ‘வாழ்ந்துகொண்டிருக்கும்’ பெரிசுகள் அல்லது அந்த சிறுமியின் தாய். இந்த சடங்கை சங்கடம் இல்லாமல் செய்து முடிக்கின்றார்கள்.

அனைத்தும் முடிந்த பின், அந்த பெண்ணின் கால்களை அகட்ட முடியாத அளவிற்கு கட்டிப் படுக்க வைத்துவிடுவார்கள். நாற்பது நாட்கள் கழித்தால்தான் அந்த புண் ஆறும் என்பது அவர்கள் கணக்கு. புனித சடங்கு முடித்த உற்சாகத்தில், வழிந்தோடிய குருதி படிவை தண்ணீரால் கழுவி விட்டு, அந்த வீட்டில் சடங்கு விருந்து நடத்தும் நிகழ்வு இன்றும் ஆப்ரிக்க நாடுகளில் இருக்கும் கிராமங்களில் நடந்து வருகின்றன. இந்த பாதக செயலை செய்தால்தான், அந்த பெண்ணின் உடலில் உள்ள துர்நாற்றம் போய் அவளுடைய மேனி அழகு பெற்று, திருமணம் செய்யும் பொழுது பாலுணர்வு அதிகரிக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். அப்படி தைக்கப்பட்ட நுாலை அந்த பெண் திருமணம் செய்த பின் அவளின் கணவன் அறுத்தால்தான் அந்த பெண்ணின் கன்னித்தன்மைக்கு தரப்படும் சான்று. ஆனால் சில நாடுகளில் க்ளிட்டோரியஸை அறுப்பதோடு நிறுத்திவிடுகின்றனர்.

இதைத்தான் தடை செய்ய சர்வதேச அளவில் பிறப்புறுப்புச் சிதைப்பிற்கு எதிரான இயக்கம் ஒன்று ஐநாவின் அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இவ்வியக்கமும், ஐநா அமைப்புகளின் உறுப்பினர்களும் இந்தியாவில் கூடினர் அப்போது அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் அவர்கள் கூறுகையில்,சர்வதேச சட்டம் மற்றும் இந்திய அரசியல் சட்டம் ஆகியவற்றின்படி, பெண்கள் மற்றும் சிறுமிகளின் மனித உரிமைகளை மீறுவதே பிறப்புறுப்புச் சிதைக்கும் நடவடிக்கையாகும். இதி்ல் எந்தவித ஆரோக்கிய விளைவுகளும் ஏற் படாது. ஆனால் இதனால் நீண்டகால நோக்கில் ஆரோக்கியத்திற்கும், மனநலத்திற்கும் பாதிப்புகள் ஏற்படும். எனவே சிறுமிகளையும் பெண்களையும் பாதுகாக்கவும் இந்நடைமுறையை தடுக்கவும் தனிச்சட்டம் வேண்டும் என்று தெரிவி்த்துள்ளதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!.

Related Posts

error: Content is protected !!