அலுவலகத்தில் இருந்து வேலை பார்த்தாலும் சரி, தற்போது கொரோனா சூழலில் வீட்டில் இருந்தே பணியாற்றினாலும் சரி, எனக்கு சிறிது ஓய்வு தேவை என நீங்கள் உணரும் தருணங்கள் இருக்கலாம். இது போன்ற நேரங்களில், உங்களுக்கு உதவுவதற்காக என்றே உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் ’ஐ நீட் ஏ பிரேக். ஒர்க்’ ( https://ineedabreak.work//).
எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தளம், அலுப்புடன் அல்லது களைப்புடன் வருபவரை, உடற்பயிற்சி செய்யுமாறு கூறுகிறது, உடற்பயிற்சி என்றால், தண்டால்,பஸ்கி போன்ற ஒர்க் அவுட் ரகம் அல்ல: மாறாக, உங்களை கொஞ்சம் அசைந்து கொடுக்க வைக்கும் லேசு ரக செயல்களை பரிந்துரைக்கிறது.
அதாவது, கம்ப்யூட்டரை பார்த்தப்படி ஒரே இடத்தில், அதிக அசைவுகள் இல்லாமல் அமர்ந்திருக்கிறோம் அல்லவா? இது நவீன ஆரோக்கிய கேடு என்கின்றனர். அதிலும் குறிப்பாக ஆசானாதிகார ( எர்கோனாமிக்ஸ்) நோக்கில் பார்க்கும் போது, ஒரே மாதிரியாக நெடு நேரம் அமர்ந்திருப்பது முதுகு வலி உள்ளிட்ட பாதிப்புகளை உண்டாக்கலாம் என்கின்றனர்.
அதனால் தான் கம்ப்யூட்டர் பயனாளிகளி பணிக்கு இடையே அடிக்கடி எழுந்து எளிதான அசைவுகளை மேற்கொண்டு உடலுக்கு சிறிது இயக்கத்தை அளிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. அதே நேரத்தில், தீவிர உடற்பயிற்சி செய்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பக்கம் பக்கமாக ஆய்வுகள் இருக்கின்றன.
உடற் பயிற்சி உடலுக்கு மட்டும் அல்ல உள்ளத்திற்கும் நல்லது என்பதை அறிவியல் நிருபித்துள்ளது. அவ்வப்போது, எழுந்து நடப்பது அல்லது லேசான அசைவுகளை மேற் கொள்வது கூட இந்த நோக்கில் பயன் தரும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த கோட்பாடுகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் இந்த இணையதளம், பயனாளிகளுக்கு ஒரு நிமிட பயிற்சியை பரிந்துரைக்கிறது. இந்த பரிந்துரையில் செய்து காட்டப்படும் அசைவுகளை செய்து முடித்து விட்டு பழைய வேலைக்கு திரும்பிவிடலாம்.
இந்த இடைவெளியால், உடலும், உள்ளமும் ஊக்கம் பெறும் என்கிறது இந்த இணையதளம்.
பணிக்கு நடுவே தூங்கி வழியும் போது அல்லது அலுப்பாக தோன்றும் போது அல்லது கவனச்சிதறலை வெல்ல ஒரு மாறுதல் தேவைப்படும் போது, இந்த தளத்தை அணுகலாம்.
இந்த தளமும், அது பரிந்துரைக்கும் பயிற்சிகளும் உங்களுக்கு பிடித்திருந்தால், சமூக ஊடகங்களில் நண்பர்களுடன் இதை பகிர்ந்து கொள்ளலாம்.
ஆண்டிரியாஸ் கேனல்லா மற்றும் ஒண்டர்லிச் ஆகிய இருவர் இணைந்து இணையதளத்தை அமைத்துள்ளனர். இருவரும், வேக் அவுட் எனும் அசத்தலான உடற்பயிற்சி செயலியையும் உருவாக்கியிருக்கின்றனர். ஆப்பிளின் ஐபோனில் செயல்படும் இந்த செயலி, எங்கேயும் எப்போதும் உடற்பயிற்சி செய்யும் கலையை கற்றுத்தருகிறது. அதாவது, பணி சூழலில், பயணங்களின் நடுவே என கிடைக்கும் நேரத்தில் எல்லாம் அங்குள்ள சூழலுக்கு ஏற்ப உடற்பயிற்சி செய்ய வழி செய்கிறது.
வழக்கமான உடற்பயிற்சி போல இல்லாமல், உற்சாகமாக செய்யக்கூடிய வகையில், கேளிக்கை அம்சம் மிக்கதாக இந்த பயிற்சிகள் அமைந்துள்ளன. ஐபோன் அபிமானிகள் இந்த செயலியை முயன்று பார்க்கலாம்:.
சர்வதேச அளவில் அதிக நாள் வாழும் உயிரினம் எதுவென நினைக்கிறீர்கள்? ஆமை? யானை? திமிங்கிலம்? இவை மூன்றும் பொதுவாக அதிக…
2007 வரை, இது "ஊனமுற்ற நபர்களின் சர்வதேச தினம்" என்று அழைக்கப்பட்ட நாளிது. உடலில் குறைபாடு இருந்தாலும் உள்ளத்தில் உறுதியுடன்…
டைரக்டர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்கும், முதல் திரைப்படமாக வெளிவருகிறது “ஃபைட் கிளப்”. திரைப்படம். ரீல் குட்…
மத்தியப் பிரதேச ஐகோர்ட்டுக்கு திருமண உரிமைகளை மீட்டெடுப்பதற்கான ஆணைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு ஒன்று வந்தது. அந்த விசாரணையில், கணவர்…
தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி இந்தியாவின் 84-வது செஸ் கிராண்ட்மாஸ்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இவர் கிராண்ட்…
பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் மூலம் தங்களை நிரூபித்த நடிகர்கள் சசிகுமார் மற்றும் சரத்குமார் இருவருக்கும் சினிமாவில்…
This website uses cookies.