சபரிமலையில் பெண்கள் அனுமதி விவகாரம் : 10 நாளில் விசாரிக்க உத்தரவு!

சபரிமலையில் பெண்கள் அனுமதி விவகாரம் : 10 நாளில் விசாரிக்க உத்தரவு!

கடந்த சில ஆண்டுகளாக சட்டச் சிக்கலுக்குள் மாட்டியுள்ள  சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கள் செல்ல அனைத்து வயதுடைய பெண்களுக்கும் அனுமதி அளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் 10 நாட்களில் முடிக்க  சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி போப்டே இன்று உத்தரவிட்டார்.

கடந்த பல ஆண்டுகளாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல அனுமதியில்லை. இந்த நடைமுறையை எதிர்த்து  சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, அனைத்து வயது பெண்களும் சபரி மலை கோயிலுக்கு செல்லலாம் என்று கடந்த 2018 செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பளித்தது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து பக்தர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி மனுத்தாக்கலும் செய்தனர்.

சீராய்வு மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது குறித்த இறுதி முடிவை எடுக்க 9 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியது. அதே நேரம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில், மாற்றம் இல்லை என்றும் கூறியது.

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது குறித்த வழக்கு 10 நாட்களில் முடிக்க வேண்டும்  தலைமை நீதிபதி போப்டே உத்தரவிட்டார். மேலும் சபரிமலை உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் பெண்களை அனுமதிப்பது பற்றி 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தும் எனவும் தெரிவித்தார்.

Related Posts

error: Content is protected !!