சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி!- கொலீஜியம் குழு பரிந்துரை!!
சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருக்கும் ஏ.பி.சாஹி வருகிற டிசம்பர் 31 ஆம் தேதியுடன் ஓய்வு பெறவிருக்கிறார்.இதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் குழு, சென்னை உயர்நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜியை பரிந்துரை செய்துள்ளது.கடந்த 1990 முதல் கொல்கத்தாவி வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த சஞ்சீவ் பானர்ஜி, 2006ல் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதியாக பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, பாட்னா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த ஏ.பி.சாஹி, சென்னை ஐகோர்ட்டின்ன் 49-வது தலைமை தலைமை நீதிபதியாக கடந்த வரும் நவம்பர் 11-ம் தேதி பதவியேற்றார்.
இதற்கிடையே, சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக உள்ள ஏ.பி.சாஹியின் பதவிகாலம் வரும் டிசம்பர் 31- ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், புதிய தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பேனர்ஜியை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
தற்போது, கொல்கத்தா ஐகோர்ட்டில் மூத்த நீதிபதியாக சஞ்ஜிப் பேனர்ஜி பணியாற்றி வருகிறார். தொடர்ந்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சஞ்ஜிப் பேனர்ஜியை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமித்து ஆணையிடுவார் என்றும் . இதன் மூலம், சென்னை ஐகோர்ட்டின் 50-வது தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பேனர்ஜி பதவியேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ஒடிசா, தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர பிரதேச ஐகோர்ட் நீதிபதிகள் குறித்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி புகார் தெரிவிக்கதாக தகவல் வெளியாகிய நிலையில், ஆந்திர மாநில அகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த மகேஸ்வரி சிக்கிம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிக்கிம் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.கே.கோசுவாமி, ஆந்திர ஐகோர்ட்டுக்குகு மாற்றப்பட்டுள்ளாராக்கும், .